search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசின் ஒரே சாதனை உதயநிதி அமைச்சராவது தான்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
    X

    உசிலம்பட்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசிய காட்சி. அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி, தவசி, பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    தி.மு.க. அரசின் ஒரே சாதனை உதயநிதி அமைச்சராவது தான்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

    • தி.மு.க. அரசின் ஒரே சாதனை உதயநிதி அமைச்சராவது தான் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது.

    மதுரை

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் விலைவாசிஉயர்வை கண்டித்து, உசிலம்பட்டியில் அதி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கடுமையான 150 சதவீத சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது. மக்களை வாழவைக்க, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை மாவட்டத்தில் 18 கால மாத கால ஆட்சியில் செய்த ஒரு மகத்தான சாதனை என்றால், ஸ்டாலின் தனது தந்தை பெயரில் நூலகம் அமைத்தது தான். எந்த திட்டங்களும் மதுரைக்கு செய்யவில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பல கோடி ரூபாயை நூலகத்திற்காக காட்டும் அக்கறை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    சொத்து வரி உயர்வை கேட்டால், இன்றைக்கு சொத்தை விற்றுதான் கட்ட முடியும். அந்த அளவில் சொத்துவரி கட்டணம் உள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் துறைதோறும் விருதுகளை பெற்று சாதனை படைத்தோம்.ஆனால் இன்றைக்கு துறைதோறும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு நிர்வாகம் ஸ்த ம்பித்துள்ளது.

    58 கால்வாய் திட்டம் என்பது, 40 ஆண்டு கனவு திட்டம் ஆகும். இந்தப் பகுதியில் தண்ணீரை திறந்து மக்களின் கண்ணீரை நாம் துடைத்தோம். ஆனால் அதற்கு எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.இதற்கு உரிமை உள்ளவர்கள் நாங்கள் தான். இன்றைக்கு இந்த நீர் திறக்கவே போராடி திறக்க வேண்டிய நிலையில் உள்ளது.

    18 மாத தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை என்றால், தனது மகன் உதயநிதியை அமைச்சராக்குவது தான், வேறு எந்த சாதனை செய்யவில்லை.இன்றைக்கு மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது இது எதிர்த்து போராடும் நிலையில் உள்ளது. ஊர் எங்கும் ஒரே பேச்சு என்றால், எப்போது எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பேற்பார் என்பதுதான், அந்த நாள் மக்களுக்கு பொன்னாள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×