search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கம்
    X

    போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கம்

    • மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரையில் இன்று முதல் தொடங்குகிறது
    • இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ள SSC CHSL போட்டித்தேர்விற்கு தோராயமாக 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலை படிப்பு (பிளஸ்-2) முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட போட்டித்தேர்வாளர்கள் இந்த பணியிடத்திற்கு ssc.nic.in என்ற இணையதசத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.

    மேலும் இந்த போட்டி தேர்வு உத்தேசமாக வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த வல்லுநர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்து கின்றனர்.

    மேற்கண்ட போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள போட்டித்தேர்வாளர்கள் விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×