என் மலர்tooltip icon

    மதுரை

    • திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
    • தி.மு.க. மன்னராட்சி போல அரசை நடத்துகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் முன்ளாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போது வந்தாலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள். குறிப்பாக இந்த 18 மாத ஆட்சியில் பொது நலன்கள், மக்கள் திட்டங்களை மறந்து விட்டது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றை மூடுவிழா கண்டுவிட்டது போல் அம்மா உணவகத்தையும் மூடு விழா செய்ய முயற்சிக்கிறது.

    குறிப்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியை புறக்கணித்து வருகின்றனர். ஏதாவது திட்டம் குறித்து கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். இந்த தி.மு.க. ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை, சத்தியம் இல்லை, நேர்மையும் இல்லை.

    கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக திட்டங்களை பாரபட்சம் இன்றி வழங்கினோம். இன்றைக்கு கல்லூரி, பள்ளிகளில் அருகே போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பது வேதனையான விஷயமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகரித்து உள்ளனர்.

    மக்கள் நலன் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த மேடை அமைத்தால், அதனை பிரிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. நீங்கள் இங்கு மேடையை பிரித்து விடலாம். ஆனால் எங்களையும் மக்களையும் பிரிக்க முடியாது.

    கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இப்படி மன்னராட்சி தமிழகத்தில் மலர செய்துள்ளார் ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டர் எடப்பாடிபழனிசாமி முதலமைச்சராக முடியும் என்ற வரலாற்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

    நாங்கள் ஜனநாயக ஆட்சி மலர பாடுபட்டு வருகிறோம். ஆனால் இன்றைக்கு மன்னராட்சியை ஒழித்தும் கூட புறவழியில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் தி.மு.க. நடத்தி வருகிறது. இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்?

    மீண்டும் ஜனநாயகத்தை நாங்கள் மலரச் செய்வோம் அ.தி.மு.க.வை தி.மு.க. சூழ்ச்சி செய்து, சிதைத்து, கலைக்க, உடைக்க நினைத்தாலும் முடியாது. இந்த இயக்கம் வீழ்வது போல் தெரியும் ஆனால் விஸ்வரூபம் எடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பொறுப்பாளராக இருக்கும் 2 பெண்கள், அவர்களது உறவினர் தோட்டத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்களை பராமரிப்பது போன்ற வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த வழக்கில் அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலரை சேர்க்க உத்தரவிட்டும் இந்த திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

    தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • வாடிப்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலி ப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, நாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி.

    ராம நாயக்கன்பட்டி, கள்ளர்ம டம், வல்லப கணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம். கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்து வபுரம், தடாக நாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், குட்லாடம்பட்டி, ரிசபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம்; ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்ப ட்டி பங்களா, கொண்டையம்பட்டி, கல்வேலி ப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி.

    சம்பக்குளம், அய்யன கவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி. தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம் நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, அய்யங்கோட்டை, சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலங்குடி, முலக்கு றிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், நகரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் விலை உயர்வை கண்டித்து மேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    மேலூர்

    மதுரை புறநகர் மாவட்ட மேலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. பால், மின் கட்டணம், சொத்துவரி ஆகியவை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

    இந்த மோசமான விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். எனவே வருகிற தேர்தலில் அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், அவைத் தலைவர் ராஜேந்திரன், மண்டல செயலாளர் ராஜசத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், ஜபார், சேர்மன் பொன்னு சாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் அருண், நிர்வாகிகள் வெற்றி செழியன், குலோத்துங்கன், பொன்ராஜேந்திரன், நகர் இணை செயலாளர் சரவணகுமார், முன்னாள் சேர்மன் சாகுல் அமீது, கவுன்சிலர் திவாகர் தமிழரசன், மெகராஜ் பீபி, பள்ளப்பட்டி முருகேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடங்கள் திறப்பு நடந்தது.
    • இதனை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட 2 சத்துணவு கூடங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தலைமை ஆசிரியர்கள் மதன்பிரபு, பரமசிவம் முன்னிலை வகித்தனர். ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகுமார், பிரபு, உசிலம்பட்டி ஒன்றியம் ஜான்சன், செல்லம்பட்டி ஜெயக்குமார், போத்திராஜ், சேடப்பட்டி அய்யர் என்ற ராமகிருஷ்ணன், டி.கல்லுப்பட்டி கண்ணன், சரவணன் சவுந்தரபாண்டி, செல்வம், மீனவரணி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
    • 10 மற்றும் 12-ம்வகுப்பில் அரசு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    மேலூர்

    மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மூலம் மாணவிகள் அமருவதற்கு மேஜைகள் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கிளப் நிர்வாகத்தினர் ரூ. 1 லட்சம் மதிப்புடைய 30 மேஜைகளை வழங்கினர். வரும் கல்வி ஆண்டில் மேலூர் தாலுகா அளவில் 10 மற்றும் 12-ம்வகுப்பில் அரசு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு கிளப் சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதில் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மகாராஜா, இப்ராகீம், ரவி, ராஜேந்திரன், உறுப்பினர்கள் சந்திரமோகன், அப்துல் ரசாக், விஜயராகவன், தலைமை ஆசிரியர் செந்தில் நாயகி, உதவி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நானும், எனது உறவினர் முத்துராஜ் என்பவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தோம்.
    • ஆவின் நிறுவனத்தில் சேருவதற்கான வேலை நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். அதை எடுத்துக்கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு சென்றபோது நியமன ஆணை போலி என தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 25). இவர் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், எனது உறவினர் முத்துராஜ் என்பவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தோம். அப்போது எங்களது உறவினர் அனந்த கிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன், திருமங்கலத்தை சேர்ந்த வைரவ ஜெயபாண்டி ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் கொடுக்க வேண்டுமென ஆசைவார்த்தை கூறினர்.

    இதனை நம்பி பணம் கொடுக்க சம்மதித்தோம். அதன்படி சென்னைக்கு சென்ற நானும், முத்துராஜூம் அங்கு ஆவினில் பணிபுரியும் மணிபாரதி என்பவரை சந்தித்தோம்.

    அப்போது அவர் வேலைக்காக ரூ. 12 லட்சம் கொடுக்க வேண்டுமென தெரிவித்தார். அவர் கூறியபடி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு வைரவ ஜெயபாண்டியிடம் முதற்கட்டமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். அதன்பின் அவர்கள் எங்கள் 2 பேருக்கு ஆவினில் அரசு வேலைக்கான நியமன கடிதத்தை கொடுத்தனர்.

    சிறிது நாட்களில் திடீரென்று வேலைக்கான நியமனம் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள பணத்தை செலுத்தினால் வேலை கிடைக்கும் என கூறினர். இதையடுத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தினோம்.

    அதன்பின் அவர்கள் ஆவின் நிறுவனத்தில் சேருவதற்கான வேலை நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். அதை எடுத்துக்கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு சென்றபோது நியமன ஆணை போலி என தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ. 12 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனந்தகிருஷ்ணன், அவரது தம்பி ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு டைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
    • கடந்த வருடம் இதே போல் பெய்த பருவ மழையின் போதும் சாலை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள பூதமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள பளுவட்டான் கண்மாய் நிரம்பியது. அந்த பகுதியில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் நிரம்பிய கண்மாய் திடீரென உடைந்து தண்ணீர் வெளியேறியது.

    இதனால் சாலை சேதமடைந்தது. மேலூரில் இருந்து தும்பை பட்டி, மாங்குளப்பட்டி, பூதமங்கலம் வழியாக சிங்கம்புணரி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இந்த பகுதியைச் சேர்ந்த செவல்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, ஒத்தப்பட்டி, செவல்பட்டி ஆகிய 4 கிராமப் பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

    நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. தண்ணீர் தெருக்களையும் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்த கண்மாய் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது.

    கடந்த வருடம் இதே போல் பெய்த பருவ மழையின் போதும் சாலை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போதே கரையை மேம்படுத்தி தண்ணீர் செல்ல பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை பொதுப்பணி துறையினர் செய்யவில்லை.

    தற்போது பெய்த கனமழையின் காரணமாக மீண்டும் பளுவட்டான் கண்மாய் 2-வது முறையாக உடைந்துள்ளது. தகவல் அறிந்த பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன் சம்பவ இடத்திற்கு வந்து ஜே.சி.பி. மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

    • ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
    • கிளை மேலாளர் வேலப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரை நரிமேடு பகுதியில் அரசு வங்கி இயங்கி வருகிறது. இதன் அருகே அந்த வங்கியின் 2 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. வங்கி அருகே ஏ.டி.எம். மையம் இருந்ததால் காவலாளி நியமிக்கப்படவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடிய வில்லை. இதனால் கொள்ளையர்கள் தங்களது முயற்சியை பாதியிலேயே கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினர். இதன் காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடு போகாமல் தப்பியது.

    மறுநாள் ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிளை மேலாளர் வேலப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ஏ.டி.எம். மையத்தில் கைவரிசை காட்டியது சொக்கிக்குளம் அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயக் குமார் (வயது 47), உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்த் (31) என தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா?
    • உதயநிதி அமைச்சர் பதவி பெற போகிறார், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?.

    திருப்பரங்குன்றம்:

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?.

    செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா?.  பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 

    • சித்தா டாக்டர்களுக்கான திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
    • அரசு சித்தா டாக்டர்களும், அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள்.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு சித்தா டாக்டர்கள் பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழக சுகாதார துறையின் கீழ் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், சித்தா மற்றும் ஓமியோபதி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையங்கள் அனைத்திலும் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    அலோபதி டாக்டர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை பின்பற்றித்தான் சித்தா டாக்டர்களையும் அரசு தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. ஆனால் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பலன்களை சித்தா டாக்டர்களுக்கு வழங்குவதில்லை. எனவே அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களை போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், அதிக எண்ணிக்கையில் உள்ள அலோபதி டாக்டர்களை போல், குறைந்த எண்ணிக்கையில் உள்ள சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த இயலாது என்று தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர்கள் சித்த மருத்துவப்பிரிவு அரசு டாக்டர்கள்தான், அவர்களும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை அளிக்கின்றனர். அதனால் அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர், அலோபதி டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரர்களுக்கு பொருந்தாது என்றாலும், இவர்களும் பலன் அடையும் வகையில் உரிய செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

    அதனால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்டி அதில் பங்கேற்குமாறு மனுதாரர்களையும் அழைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சித்தா டாக்டர்கள் பயன் பெறும் வகையில் உரிய செயல் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • 99 வருட ஒப்பந்தத்தை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    • சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுப்பதாக அறிக்கை தாக்கல்

    மதுரை:

    சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், 'மதுரை ஆதினம் மடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மடத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு பல 100 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இருந்த மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தரப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மற்றும் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சார்ந்த தனியார் நிறுவனத்திற்கு 99 வருட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

    கோயில் நிலங்களை எல்லாம் 99 வருட ஒப்பந்தம் தான் செய்யமுடியும். இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அந்த ஒப்பந்ததை காண்பித்து போலியாக பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. ஆதின மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என்ற சட்டம் இருக்கிறது. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கிறது. ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293வது ஆதினமான ஞானசம்பந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சாமிநாதன், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'மறைந்த 292வது ஆதினம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்கள் பணபலம் மிக்கவர்கள். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கேட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலத்தை மீட்பதற்கு காவல் துறையினர் போதிய பாதுகாப்பை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×