என் மலர்
மதுரை
- மதுரை பெத்தானியாபுரம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
- இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை பெத்தானியா புரம் சின்னசாமி பிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ''வி.எல்.சி. அக்ரோ டெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களிடம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.
பொதுமக்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பி தராமல் அவர்கள் நம்பிக்கை மோசடி செய்தனர்.
இதுபோல் அவரது ஊரைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறும் முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்கண்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிலையம் எதிர்புறம், மதுரை-14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முடுவார்பட்டி ஊராட்சியில் மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2010-11-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பராமரிப்பின்றி மயானத்தில் செடிகள் அடர்ந்து வளர்நது காடு போல காட்சியளிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானத்திற்கு உடலை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மயானத்தில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் புதர் போல காட்சி அளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடுவார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மதுரை விக்கிரமங்கலத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
- நாளை (16-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மதுரை
விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
விக்கிரமங்கலம், கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, செக்கான கோவில்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, மேலபெருமாள்பட்டி, மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், கல்புளிச்சான்பட்டி, நடுவூர், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, மம்மூட்டிபட்டி, ஜோதிமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இத்தகவலை சமயநல்லூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.
- வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் பால், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டி பங்களாவில் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிர்வாகிகள் பிச்சை, பாண்டி, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர் கேட்டுகடையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரேவதி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினர்.
- மதுரையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- வேலை நாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.
வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- நோய் குணமாகாத விரக்தியில் 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை உத்தப்ப நாயக்கனூர் வெள்ளை மலைபட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42).
கூலி தொழிலாளியான இவருக்கு சிறுநீரக கல்லடைப்பு பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரண மாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனை களில் காண்பித்தும்நோய் முற்றிலுமாக குணமாகவில்லை.
எனவே வாழ்க்கை யில் விரக்தி யடைந்த சிவகுமார், உத்தப்பநாயக்கனூர்- மொண்டிக்குண்டு ரோட்டில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வலையாங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(50). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு மூட்டு வலி பிரச்சினை இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம், வீட்டின் பின்புறம் உள்ள தகரக்கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது.
- அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இல்லம் தேடி கல்வி திட்டங்கள் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. பெரிய அளவில் பலன் தரவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி. நடத்திய ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை கல்வியை வலுப்படுத்தி மாற்று திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் தேதி, மாதத்தை கூட சரியாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை உள்ளது.
அதிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கி உள்ளது. அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 40-ல் இருந்து 45 சதவீதம் வரை மாணவர்கள் தாய் மொழியை நன்கு படிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது. இதன் மூலம் தமிழகத்திலே கல்வி கற்றலில் பின்தங்கி இருப்பது வேதனையின் வேதனையாகும்.
கொரோனா தாக்கம் இருப்பதாக நாம் வைத்துக் கொண்டாலும் கூட, இந்த 2 ஆண்டுகளாக இன்னும் பள்ளிக்கு முழுமையாக மாணவர்களை வரவழைத்து, அவர்களுக்கு கல்வி பயில்வதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், தோல்வியிலே முடிந்திருப்பதே ஆய்வின் மூலம் தெரிகிறது.
ஆகவே பிரிட்ஜ் கோர்ஸ் என்ற இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. எனினும் தமிழக மாணவர்களின் அடிப்படை கற்றல் பின்தங்கி இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டி பகுதியில் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் இன்று பார்த்தனர்.
இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டியில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரை நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதை பார்த்ததாக சிலர் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்று விசாரிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் பசுபதி (வயது19), நடுவளவு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பெருமாள் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த வாலிபரை கொன்றது தாங்கள் தான் என்றும், அந்த நபர் நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் (35) எனவும் கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாலிபர் கொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பசுபதி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரும் கடந்த 13-ந் தேதி காலை மேலூர் அருகே உள்ள மலம்பட்டி அரசு மதுக்கடையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது வண்ணாம்பாறைபட்டி பிள்ளையார் கோவில் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார்.
குடிபோதையில் இருந்த பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜ்குமாரை உருட்டுக்கட்டையால் அடித்து நிர்வாணப்படுத்தி தங்களின் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு தப்பி ஓடி முயன்றுள்ளார். இதையடுத்து பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை பீர்பாட்டிலால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்பு ராஜ்குமாரின் உடலை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு பசுபதி மற்றும் பெருமாள் அங்கிருந்து சென்று விட்டனர். ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2 நாட்களாக யாருக்கும் தெரியவில்லை.
அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் கிடந்தது இன்று காலையில் தான் தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை பிச்சைக்காரர் என்று கூட பார்க்காமல் கொலையாளிகள் இருவரும் குடிபோதையில் ஓரின சேர்க்கைக்கு முயன்று, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் கொலை செய்துள்ளனர்.
ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட்டு வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து.
தென்ன ஓலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள்.
ஹீரா நகர், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1-வது, 2-வது, 3வது தெருக்கள், எம்,கே, புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம்.
சுப்பிரமணியபுரம் மார்க்கெட், வி.வி. கிரிசாலை, தெற்கு ஆவணி மூலவீதியின் ஒரு பகுதி, தெற்கு மாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி, பாண்டிய வேளாளர்தெரு, வீர ராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு.
பச்சரிசிகார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, கிரைம் பிராஞ்ச், தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்க மிசன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரத்தெரு.
மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளிஅம்மன்கோவில்தெரு, மேலத்தோப்பு.
புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோட்டின் வடக்குப்பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோவில், பிள்ளையார் பாளையம் கிழக்கு-மேற்குப் பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, காஜாதெரு, தெற்குவெளிவீதி, பாம்பன்ரோடு.
சண்முக மணி நாடார் சந்து, தெற்கு மாசி வீதியின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண், நவபத்கானா தெரு, 10 தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்து ரோடு, சிந்தாமணி ரோடு.
மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர். மில் ரோடு, கீரைத்துறை, கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை.
கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்து கல்லூரி, நாகு தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உதயநிதி இப்போது எய்ம்ஸ் பற்றி வாய் திறக்காதது ஏன்? என ஆர்ப்பாடடத்தில் ராஜன் செல்லப்பா பேசினார்.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல.ஏ பேசியதாவது:-
தி.மு.க. அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்தது.தற்போது மின்கட்டணத்தை 53 சதவீதமும், வீட்டு வரியை 100 சதவீதமும் உயர்த்தி விட்டார்கள். பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போதைய விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றனர். அதற்குள் இந்த விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
தற்போது புயல், மழை காரணமாக மக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் முதல்வர் தனது மகனுக்கு அமைச்சர் பதவியேற்பு விழா நடத்துகிறார். தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கூறி செங்கல்லை தூக்கி வாக்கு சேகரித்த உதயநிதி தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வாய் திறக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடி மராமத்து பணி மூலம் தமிழகமெங்கும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். பொது மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆர்ப்பாட்டத்தில்
இவ்வாறு அவர் பேசினார்.
பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்யன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட்டு வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து.
தென்ன ஓலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள்.
ஹீரா நகர், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1-வது, 2-வது, 3வது தெருக்கள், எம்,கே, புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம்.
சுப்பிரமணியபுரம் மார்க்கெட், வி.வி. கிரிசாலை, தெற்கு ஆவணி மூலவீதியின் ஒரு பகுதி, தெற்கு மாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி, பாண்டிய வேளாளர்தெரு, வீர ராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு.
பச்சரிசிகார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, கிரைம் பிராஞ்ச், தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்க மிசன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரத்தெரு.
மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளிஅம்மன்கோவில்தெரு, மேலத்தோப்பு.
புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோட்டின் வடக்குப்பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோவில், பிள்ளையார் பாளையம் கிழக்கு-மேற்குப் பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, காஜாதெரு, தெற்குவெளிவீதி, பாம்பன்ரோடு.
சண்முக மணி நாடார் சந்து, தெற்கு மாசி வீதியின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண், நவபத்கானா தெரு, 10 தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்து ரோடு, சிந்தாமணி ரோடு.
மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர். மில் ரோடு, கீரைத்துறை, கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை.
கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்து கல்லூரி, நாகு தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- மது போதையில் அவரது கூட்டாளிகள் உளறியதால் கொலை சம்பவம் அம்பலமாகி உள்ளது.
- தமிழரசன் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை:
மதுரை அண்ணாநகர் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27). கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ராஜாங்கம் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதையடுத்து மாயம் தொடர்பாக அண்ணா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நண்பர்களுடன் மது அருந்தினார்.
போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நவீன் சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக உளறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நவீனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழரசனை கொலை செய்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழரசன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஒத்தக்கடை பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழரசன் தனது நண்பர்களுடன் ஜாமீன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது தமிழரசனுக்கும், பெரியசாமி மனைவி வள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பெரியசாமி, தனது மனைவியுடன் தமிழரசன் தகாத உறவு வைத்துள்ள விவகாரம் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, தமிழரசனை கொலை செய்ய நண்பர்களுடன் திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி தமிழரசனை மது குடிக்க வருமாறு அப்பன்திருப்பதி அருகே உள்ள குருத்தூர் கிராமத்துக்கு அழைத்துள்ளார்.
அங்கு பெரியசாமி, அவரது நண்பர்கள் கொக்குளத்தை சேர்ந்த அக்கினி, பட்டணம் பகுதியைச் சேர்ந்த நவீன்(21), அழகேஷ்(18), குணாளன்(19), அழகர் ஆகியோருடன் தமிழரசன் மது குடித்தார்.
அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசனை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் ஏற்கனவே திருடிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் தமிழரசனின் உடலை கயிற்றால் இறுக்கி கட்டி அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் வீசியுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கொலை செய்த பெரியசாமியும், அக்கினியும் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றனர்.
மது போதையில் அவரது கூட்டாளிகள் உளறியதால் கொலை சம்பவம் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக நவீன் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் போலீசார் குருத்தூர் பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் எலும்புக்கூடாக கிடந்த தமிழரசன் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழரசன் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அழகரை தேடி வருகின்றனர்.
கொன்று வீசப்பட்ட வாலிபர் தமிழரசன் உடல் எலும்புக்கூடான நிலையில் 4 மாதத்திற்கு பின் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






