மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்

முடுவார்பட்டி ஊராட்சியில் மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

2010-11-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பராமரிப்பின்றி மயானத்தில் செடிகள் அடர்ந்து வளர்நது காடு போல காட்சியளிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானத்திற்கு உடலை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மயானத்தில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் புதர் போல காட்சி அளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடுவார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com