என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்
    X

    வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

    • வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் பால், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டி பங்களாவில் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிர்வாகிகள் பிச்சை, பாண்டி, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர் கேட்டுகடையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரேவதி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினர்.

    Next Story
    ×