என் மலர்tooltip icon

    மதுரை

    • மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடந்துது.
    • இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த தினமான ஜனவரி 25 மொழிப்போர் தியாகி தினமாக அறிவித்த வர் கலைஞர் கருணா நிதி. இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர் என்றார்.

    கூட்டத்தில் சோழ வந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன், வல்லாள பட்டி சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திர பிரபு, ராஜராஜன், பாலகிருஷ்ணன், பழனி, வல்லாளபபட்டி பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ரெயில் டிக்கெட் முறைகேடாக விற்ற ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டன.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15.44 லட்சம் மதிப்பு உள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதேபோல அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ரூ.2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்.

    அவர்களிடம் இருந்து ரூ.24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் பிடிபட்டன. ரெயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வீட்டில் கோபித்துக் கொண்டு ரெயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அடுத்தபடியாக ரெயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு, லட்சம் மதிப்புள்ள உடமைகள் மீட்கப்பட்டு உரி யவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் சென்ற 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டு உள்ளது.

    அகில இந்திய அளவில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் 140 சட்டவிரோத மென்பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ரெயில்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்திய அளவில் 143 ரெயில் நிலையங்களில் 17,756 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். ரெயில்வே சொத்துக்களை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.7.37 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    194 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பிடித்து வைத்திருந்த 559 நபர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். ஓடும் ரெயிலில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பேர் பத்திரமாக காப்பாற்றப்பட்டு உள்ளனர். ரெயிலில் தவறவிடப்பட்ட ரூ.46.5 கோடி மதிப்புள்ள 25,500 உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பெண்கள் பாதுகாப்பி ற்காக 640 ரெயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் அடங்கிய "என் தோழி" குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். ஓடும் ரெயில்களில் 209 குழந்தைகள் பிறந்து உள்ளன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 32). இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கூலித்தொழிலாளியான அழகுபாண்டி மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ஆந்திரா மாநிலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, அங்குள்ள முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

    அவர் ஆந்திரா சென்றதும் அவரது மனைவி தனது மகன்களுடன் மதுரை ஒத்தக்கடை அருகே மேல உறங்கான்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அழகுபாண்டி மீதான கொலைமுயற்சி வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    அதில் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக ஆந்திராவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அழகுபாண்டி மேல உறங்கான்பட்டியில் உள்ள மாமனாரின் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று இரவு அழகு பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினர். அழகு பாண்டியும், அவரது மாமனார் மூக்கனும் முன்பக்க அறையில் படுத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்களது வீட்டின் கதவை சிலர் தட்டினர்.

    இதனால் விழித்தெழுந்த மூக்கன் வீட்டின் கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே 5 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது அந்த நபர்கள், மூக்கனை கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர்.

    அங்கு தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த அழகுபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அழகுபாண்டியை கொன்ற மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறைக்குள் படுத்து தூங்கிய அழகுபாண்டியின் மனைவி மற்றும் மகன்கள் எழுந்து வந்தனர். அவர்கள் அழகுபாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அழகுபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி வந்து பார்வையிட்டார். அவர் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு பாண்டிக்கு ஒத்தக்கடை, மேலூர், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஏராளமான அடிதடி வழக்குகளில் தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு விரோதிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆகவே முன் விரோதத்தில் அவரை மர்மநபர்கள் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் 21 கிலோ கஞ்சாவை வாலிபர்கள் கடத்தினர்.
    • நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரநாயர் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீ சார் ரோந்து சென்றனர். கூடல்நகர், ெரயில் தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்த இருவரிடம் விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் அருள் தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு நாய்போடு கணேசன் மகன் ஹரிஹரன் (22), சோழவந்தான் அருகில் உள்ள ஊத்துக்குளி ரமேஷ் மகன் விஜயேந்திரன்(23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை புது ஜெயில் ரோடு வெள்ளை அம்மன் கோவில் அருகே 30 கிராம் கஞ்சாவுடன் முரட்டன்பத்ரி ரஞ்சித்குமார் (25) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

    • தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர்கள் மரியாதை செலுத்தினர்.
    • இப்ராகிம் ஷா ராஜா, ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கீழ மாத்தூர் தங்கராஜ், குமரேசன், யோகராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கோச்சடை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. முருகேசன் தலைமையில் மாணவரணி மாவட்ட செயலாளர்கள் பிரபாகர் சோலை இளவரசன், கமலநாதன் ஆகியோர் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

    இதில் இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன், அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளர்கள் உசிலை பிரபு, வையதுரைமாரி, நகர செயலாளர் சசிகுமார், துதி திருநாவுகரசு, குணசேகரன், மீனவரணி ராமநாதன், இளைஞரணி சரவணன், ராஜமாணிக்கம், இப்ராகிம் ஷா ராஜா, ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கீழ மாத்தூர் தங்கராஜ், குமரேசன், யோகராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கோச்சடை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    மதுரை

    இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் கூறினார்.

    மதுரை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்துள்ளது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த போஸ்டர்களில் "ஆதரவு ஈவோரை விலக்கு, இன்றைய இலக்கு, ஈரோடு கிழக்கு, இந்த மாதிரி நேரத்தில் நம்மவர் சொல்லுற வார்த்தை பார்த்துக்கலாம். தனியே களம் காண்போம், நம்பிக்கையே நம் பலம்" போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக கமல் அறிவித்துள்ள நிலையில், தனித்து போட்டியிட வேண்டும் என்று கமல் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும்.
    • சட்டக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் அரசாணைப்படி, தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த அரசாணையை பின்பற்றி தமிழில் பெயர் பலகைகள் வைக்கவில்லை. அதை விசாரித்த ஐகோர்ட்டு, அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு அலுவலகங்களிலும், தொடர்புடைய அலுவலகங்களிலும் உள்ள பெயர் பலகைகள் அரசாணையின்படி உரிய முறையில் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த அரசாணையை பின்பற்றி தனியார் நிறுவனங்கள், தங்கள் பெயர் பலகையை தமிழ், ஆங்கில மொழிகளில் வைப்பதில்லை. இது சம்பந்தமாக தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், "தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும். குறிப்பாக சட்டக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். மேலும், வழக்கு தொடர்பாக குறிப்பு எடுக்க பயன்படும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.

    அதன் பின்னர், "தற்போது 'திராவிட மாடல்' என்ற சொல் பலதரப்பட்டவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த திராவிட மாடலில் 'மாடல்' என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? அந்த தமிழ் சொல்லை பயன்படுத்தாமல் ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாம்" எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    விசாரணை முடிவில், அரசாணையின்படி தமிழ், ஆங்கில மொழிகளில் பெயர் பலகை வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகைகளை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தொழிலாளர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • மதுரையில் நாளை ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ எம்.பி. பேசுகிறார்.
    • திரளாக பங்கேற்க பூமிநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை (25-ந் தேதி) வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ரோட்டில் உள்ள ஒபுளா படித்துறை சந்திப்பில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத் திற்கு மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். மாநில தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மொழிப்போர் தியாகி களுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க. சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திராவிட இயக்க போர்வாள், கழகப் பொதுச் செயலாளர், வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணிகளின் செய லாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    மதுரை

    செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சேரும்.

    இந்த ரெயில்கள் நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-2 மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-2 மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    யாகப்பா நகர் முத்துமணி மனைவி வெண்ணிலா (வயது23).இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உத்தங்குடி சின்ன மங்கலக்குடியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் (42). இவர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் புதூர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை ேசர்ந்த சதீஷ்குமார் மனைவி முத்துலட்சுமி(23).இவர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார்.

    வீட்டில் தனியாக இருந்தபோது முத்துலட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

    திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.நகர் முனியாண்டி கோவில் சந்தை சேர்ந்த பழனி மகன் வாசு(17). பிளஸ்-2 மாணவர். அவருக்கு படிக்க விருப்ப மில்லை. பெற்றோர் படிக்கும்படி வற்புறுத்தினர்.இதில் மனமுடைந்த மாணவர் வாசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலம் ரூ.1.47 கோடி கிடைத்தது.
    • உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அருணாசலம் முன்னிலையில் இந்த கோவில் மற்றும் 11 உப கோவில்களின் காணிக்கை உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    இதில் திருப்பரங்குன்றம், முருகன் கோவில் துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரதிநிதி, கண்கா ணிப்பாளர், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் கள்ளிக்குடி ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 465 கிராமும், வெள்ளி இனங்கள் 890 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 497 எண்ணமும் கிடைத்தன.

    ×