என் மலர்tooltip icon

    மதுரை

    • வாடிப்பட்டி யூனியனில் குடியரசு தின கிராமசபை கூட்டம் நடந்தது.
    • வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லா டம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள் நடந்தன. கச்சைகட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். சிறப்புஅழைப்பாளர்களாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விராலிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் காளியம்மாள் தலைமையில் துணைத்தலைவர் மணிகண்டன், பற்றாளர் சரோஜா, ஊராட்சி செயலாளர் செந்தாமரை முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செம்மினிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் தெய்வதர்மர் தலைமையில் துணைத்தலைவர் பஞ்சு, பற்றாளர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்சரஸ்வதி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    குட்லாடம்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிமீனா தலைமையில் துணைத்தலைவர் கதிரவன், பற்றாளர் மலர்மன்னன், ஊராட்சிசெயலாளர் தனலட்சுமி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ராமயன்பட்டியில் ஊராட்சிமன்றதலைவர் குருமூர்த்தி தலைமையில் துணைத்தலைவர் ராஜலட்சுமி, பற்றாளர் கவிதா, ஊராட்சிசெயலாளர் மகாராஜன் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பூச்சம்பட்டியில் தலைவர் சாந்தி தலைமையில் துணைத் தலைவர் லதா, பற்றாளர் சங்கர், ஊரட்சிசெயலாளர் செல்வம்முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம நி ர்வாக அலுவலர்கள், வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகரின் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
    • மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்து உள்ளது. தினமும் மதுரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ,அழகர் கோவில், அரசு மருத்துவமனை, மதுரை ஐகோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.பல சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

    நகரின் முக்கிய இடங்க ளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அவைகள் பெயரளவில் அகற்றப்படுகின்றன. பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து விடுகின்றன. இதற்கு சில அதிகாரிகளும், அரசி யல்வாதிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது.

    மேம்பால வசதி குறை வாக உ ள்ளதால் தினமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. சிக்னல்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் சென்று வரு கின்றனர். இவர்களை கண்டுகொள்ளாத போக்கு வரத்து போலீசார் சில இடங்களில் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கின்றனர்.

    முக்கிய சாலைகளை கடக்கும் இடத்தில் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய வருவதில்லை.சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே வயதானவர்கள் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்கள், முதிய வர்கள் வசித்து வரு கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வசிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

    ஒரு நகரின் வளர்ச்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை காண முடிகிறது. எனவே நகர வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முக்கியமாக ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் சுகாதார பணிகளை இரவிலேயே செய்து எப்போதும் நகரம் சுத்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். கொசு மருந்தடித்து கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • சீர்நாயக்கன்பட்டி ஆ.வெல்லோடு கரட்டழகன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நடராஜன்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சீர்நாயக்கன்பட்டி ஆ.வெல்லோடு கரட்டழகன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நடராஜன். இவர் சம்பவத்தன்று பசுபதி பாண்டியன் நினைவு நாளுக்கு சென்றார்.

    அப்போது மதுரை கூடக்கோவில் அருகே உள்ள பாரபத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த மறுத்ததுடன் ஆயுதங்களை காட்டி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கிருந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

    இந்த நிலையில் நடராஜன் மீது திண்டுக்கல், தேனி, மதுரை போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும் தொடர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை அடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குண்டர் சட்டத்தில் நடராஜனை கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் அனீஷ்சேகர் குண்டர் சட்டத்தில் நடராஜனை கைது செய்ய உத்தர விட்டார். போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    • திருமங்கலத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
    • துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசுதினவிழா நடந்தது. திருமங்கலம் நகராட்சியில் தலைவர் ரம்யா முத்துக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் தி.மு.க. நகரச்செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மையை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து தெற்குதெருவில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்து, கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், பெல்ட்முருகன், காசிபாண்டி, சின்னசாமி, ரம்ஜான்பேகம் ஜாகீர், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் லதா ஜெகன் தேசியக் கொடியேற்றினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் நடந்தது.
    • இதனைத்தொடர்ந்து தனியார் மகாலில் வெடி வெடிக்க தடை பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத்தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சிவக்குமார், சுசிலா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நகராட்சி 24 வார்டுகளிலும் குடிநீர் வசதி, ரோடு வசதி, தெரு விளக்கு என தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவுன்சிலர்களின் கோரிக்கையாக உசிலம்பட்டி பகுதிகளில் தனியார் மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு வெடி வெடிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தனியார் மகாலில் வெடி வெடிக்க தடை பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என்று ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டினார்.
    • தமிழ் மொழி குறித்து தி.மு.க. விற்கு பேச எந்த தகுதியும் கிடையாது.

    சிவகாசி

    சிவகாசி அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    தமிழ் மொழி குறித்து தி.மு.க. விற்கு பேச எந்த தகுதியும் கிடையாது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, இலவச லேட்பாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதுடன் சொத்துவரி, வீட்டு வரி, மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் விஜய், துணை செயலாளர் சோலை இரா, க ண்ணன், தலைமை கழக பேச்சாளர்கள் சிங்கை. அம்புலம், மதுரை தமிழரசன், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்..ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா கலந்து கொண்டு பேசினர்.

    சிவகாசி கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் அசன்பதூருதீன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, சிவகாசி மாநகர பகுதி கழகச் செயலாளர்ள் கருப்புசாமி பாண்டியன், சாம்(எ) ராஜா அபினேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் வசந்தகுமார், மாவட்ட மாணவர் அணி ஜான் என்ற மாரி செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மகேஸ்வரி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய அம்மா பேரவை கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.

    • சோழவந்தான் அருகே சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடங்கப்பட்டது.
    • சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே வைகை ஆற்றுக்கு மேற்கு பகுதியில் செல்லும் மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மார்நாட்டான் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அடுத்து இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வருவாய்துறையினர் முதல் கட்ட சர்வே பணி முடித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் ஆலோசனையின் பேரில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் பிர்கா சர்வேயர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் சித்தாயிபுரம் கோவில், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி, மன்னாடிமங்கலம் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும்.
    • மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

    மேலும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் உள்பிரகார சன்னதி முன்பாக நடந்தது.

    மேளதாளம் முழங்க சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாய படி நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்கு முன்னோட்ட நிகழ்வுதான் இது. இந்த விழாவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், கூடலழகர்கோவில், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள் செல்வம், கோவில் பட்டர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • 3-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தைப்பூச விழா நடைபெறும்.

    முருகப் பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக பூ மாலைகளால் தங்க கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வெளிபிரகாரத்தில் சுவாமி புறப்பாடாகி சென்று சஷ்டி மண்டபத்திற்கு போய் இருப்பிடம் சேர்ந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதி கல் மண்டபம் முழுவதும் வண்ண மாலைகளால் தோரணமாக கட்டப்பட்டிருந்தது. மாலையில் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது.

    விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் காலையிலிருந்து மாலை வரை நடைபெறும். இதில் மாலையில் அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். நாளை(சனிக்கிழமை)மாலையில் காமதேனு வாகனத்திலும், 29-ந் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 30-ந் தேதி பூச்சப்பரத்திலும், 31-ந் தேதி யானை வாகனத்திலும், பிப்ரவரி 1-ந் தேதி மாலையில் பல்லாக்கு புறப்பாடு, 2-ந் தேதி குதிரை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க தேரோட்டமும் 4-ந் தேதி தைப்பூச விழா நடைபெறும். இதில் தீர்த்தவாரி உள்பட பல நிகழ்வுகள் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் இந்தியை ஒருபோதும் நுழைய விட மாட்டோம் என்று மதுரையில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னரை இதுவரை கண்டதில்லை.

    மதுரை

    மதுரையில் மொழிப் போர் தியாகிகளை போற்றி டும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ம.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பூமிநாதன் எம். எல். ஏ. தலைமை தாங்கி னார். மாநில தொண்ட ரணி செயலாளர் பாஸ்கர சேது பதி முன்னிலை வைத்தார்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றினார். அவர் பேசிய தாவது-

    தமிழ்நாடு தான் எங்கள் நாடு என்று ஓங்கி உரத்த குரலில் பேசிய பெரியார், தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த தியாக சீலர்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு தியாகங்களை செய்து மொழியையும், இனத்தையும் காத்து நிற்பவர்கள் நம் தலைவர்கள். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என்று நினைத்தால் நாடு துண்டாகும் என்று அன்றைக்கே எச்சரித்தார் தந்தை பெரியார். 1963-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்தி தான் ஆட்சி மொழி எனக் கூறி ஆட்சி மொழி மசோதா கொண்டு வந்தபோது பேரறிஞர் அண்ணா தலைமையில் அந்த அரசியல் சட்ட நகலுக்கு தீ வைத்து கொளுத்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு தலைவர் கலைஞர் என்னை வழியனுப்பி வைத்தார். நானும் போராட்டத்தில் ஈடுபட்டேன். அன்றைக்கு தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு தொடர்ந்து தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இப்போதும் மத்திய ஆட்சியாளர்களாலும், சனாதன சக்திகளாலும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவ அடிப்படை என்று கூறி நம்மை பிரிக்க பார்க்கிறார்கள். மோடியை போல மக்களை ஏமாற்றுபவர் நாட்டில் யாருமில்லை. இந்துத்துவா சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்டி அடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

    தமிழ்நாட்டில் இருக்கின்ற கவர்னர் தமிழகம் என்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் தமிழ்நாடு என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னரை இதுவரை கண்டதில்லை. தமிழ் மொழிக்காக உயிரைத் தந்த போராளிகளின் மீது ஆணையாக கூறுகிறோம் இந்துத்துவாவையும், இந்தியையும் தமிழ்நாட்டில் ஒருபோதும் நுழைய விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, மனோகரன், பசுபதி அம்மாள், கீரைத்துறை பாண்டியன், முனியசாமி, அன்னமுகமது, மகபூப்ஜான், தொண்டரணி அமைப்பாளர்கள் பச்ச முத்து, சண்முகவேல், ராஜா என்ற ராஜ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • மதுரையில் குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்.
    • சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக

    74-வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் 37 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், 217 காவல் துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்க ளையும், சிறப்பாக பணியாற்றிய 75 காவல் துறை அலுவலர்களுக்கும், அரசு துறைகளை சார்ந்த 250 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஹார்விப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த சரவணன் மனைவி மேனகா (வயது 38). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில், "நான் ஆதீஸ்வரன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த நிலையில் அவர்கள் "எங்களுக்கு படப்பாடி தெருவில் ஒரு வீடு உள்ளது. அதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டனர். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

    இதனைத் தொடர்ந்து ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் என்னிடம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகும் அவர்கள் எனக்கு வீட்டை பத்திர பதிவு செய்து தர முன்வரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×