search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் குடியரசு தினவிழா
    X

    குடியரசு தின விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மதுரையில் குடியரசு தினவிழா

    • மதுரையில் குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்.
    • சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக

    74-வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் 37 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், 217 காவல் துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்க ளையும், சிறப்பாக பணியாற்றிய 75 காவல் துறை அலுவலர்களுக்கும், அரசு துறைகளை சார்ந்த 250 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×