என் மலர்
மதுரை
- அரசியல் நடத்தி அரசுக்கு சவால் விடும் அண்ணாமலையை உடனே கைது செய்ய வேண்டும்.
- பசும்பொன் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாது காப்பாக உள்ளனரா? என்று கண்டறிய பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்றும், தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், தமிழ்நாட்டு மக்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வெறுப்பு அரசியலை நடத்தி இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக செயல்படும் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலை தேவையற்ற கருத்துக்களை பேசி வருகிறார்.
மொழிப் பிரச்சினையை உருவாக்கி அதன்மூலம் வதந்தியை பரப்பி அச்சத்தை உருவாக்கி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு கலவர சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தப்பு கணக்கு போடுகிறார் அண்ணாமலை.
பெரியார் மண்ணான திராவிட பூமியில் பா.ஜ.க.வின் கனவும் அண்ணாமலையின் கனவும் ஒருபோதும் பலிக்காது. வீண் ஜாம்பவானாக அறிக்கை அரசியல் நடத்தும் அண்ணாமலையை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென வேண்டுகிறேன். ஏனெனில் ஆதிக்க இந்தியை எதிர்ப்பதும் அன்னை தமிழை காப்பதும் திராவிட இயக்கங்களின், தமிழக மக்களின் தலையாய கொள்கையாகும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. ஆகவே திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்போற்றும் திராவிட மாடல் அரசை திறம்பட இந்திய ஒன்றியமே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறார். இதற்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கலகம் விளைவித்திட முயற்சி செய்யும் அண்ணாமலை, சீமான் போன்றவர்களை தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கைது
- தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழங்கள், காய்கறி தொழில் முக்கியமானதாகும்.
- மக்கள் தரும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அதில் அவர்களின் வாழ்க்கை, கனவு அடங்கி உள்ளது.
மதுரை:
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த அரசு சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை நீங்களும் அறிவீர்கள். அவைகளுக்கு நீங்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழங்கள், காய்கறி தொழில் முக்கியமானதாகும்.
இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் வறட்சியானவை. அங்கு பெரும் தொழில் நிறுவனங்கள் இல்லை. மதுரை மாவட்டத்துக்கும் சில குறிப்பிட்ட தேவைகள் உள்ளது.
அவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில் மாவட்ட கலெக்டர்கள், துறை அலுவலர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
துறை வாரியாக நடைபெறும் பணிகளை துரிதப்படுத்தவும், தரமாக பணிகள் நடைபெறவும் ஆய்வு நடத்த வேண்டும். முக்கியமாக பட்டா மாறுதல், திருத்தம், சான்று வழங்குதல் போன்றவைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வழங்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள். இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
மக்கள் தரும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அதில் அவர்களின் வாழ்க்கை, கனவு அடங்கி உள்ளது. கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள், துரிதமாக முடிக்க வேண்டிய சாலை சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிக்காக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கருத்துக்களையும், உறுதிமொழியும் தெரிவித்துள்ளீர்கள். மாவட்டத்தில் திட்டங்களை செயலாக்கம் செய்யவும் சிறப்பாக மக்கள் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளுக்கு இந்த அரசு துணை நிற்கும்.
மாவட்ட கலெக்டர்கள் மக்கள் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசுக்கு எடுத்துக்கூறி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும்.
- பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல.
மதுரை:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசியதாவது:
* தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும்.
* மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும்.
* மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
* பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல.
* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
* மாவட்டங்களுக்கு ஏற்ப சிறப்பு தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.
* மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும்.
* ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
* கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வாங்கி கொண்டு நிலத்தை கொடுக்காதது தெரியவந்தது.
- கவுன்சிலர் ஜெயச்சந்திரனை போலீசார் இன்று கைது செய்தனர்.
மதுரை:
மதுரை சூர்யா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வய 64). இவர் மதுரை மாநகராட்சியில் சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் ஜெயச்சந்திரன் என்பவரிடம் சீட்டு சேர்ந்து ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் கட்டி உள்ளார்.
இந்த தொகைக்கு பொய்கைகரைப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள தனது நிலத்தை தருவதாக கூறி உள்ளார். ஆனால் சொன்னபடி அவர் நிலம் எழுதி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம், இதுபற்றி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது சுப்பிரமணியம், தான் பணம் கட்டியதற்கான ஆவணங்களை காண்பித்தார். விசாரணை முடிவில் கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வாங்கி கொண்டு நிலத்தை கொடுக்காதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவுன்சிலர் ஜெயச்சந்திரனை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கரடிக்கல் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது.
- வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம் ஏந்தியவாறும் உள்ளது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கரடிக்கல் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர், பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் ஆனந்த குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் வீரன் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:
சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக கருதப்படுகிறது. நடுகல் என்பது போரில் இறந்த வீரர்களின் நினைவாக வைக்கப்படும் கல்லாகும்.
கரடிக்கல் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது. இது தனி பலகை கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம் ஏந்தியவாறும் உள்ளது.
வலது கையில் நீண்ட வாளை பிடித்தவாறு சிற்பம் உள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையை அள்ளி முடித்தும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீர சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும்.
வீரனின் இடுப்பு பகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும் கை, கால்களில் வீரக்கழல் அணிந்து கொண்டும் முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்வது போன்ற நிலையில் காணப்படுகிறது.
வீரனின் வலதுபுறத்தில் பெண் சிற்பம் தேய்ந்த முகத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையும் , உடல் முழுவதும் ஆடை அணிந்து வலது கை தொங்கவிட்டு, இடது கை வீரனை பின் தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தேய்ந்த நிலையில் உள்ளது. இந்தக் கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது. கல்வெட்டில் கடைசி வரி பெற்றான் என்ற வரி மட்டும் வாசிக்க முடிந்தது. மற்ற எழுத்துக்கள் தேய்மானம் கொண்டு இருப்பதால் பொருள் அறியமுடியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் கி.பி 16-ம் நூற்றாண்டு என்று தெரியவந்துள்ளது.
இந்த பகுதியில் போர்க்களத்தில் திறம்பட போரிட்டு இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த நடுகல்லை மக்கள் வேட்டைக்காரன் சாமி என்று வழிபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 அரசு தொடக்கப் பள்ளிகள், 26 அரசு நடுநிலை பள்ளிக்கூடங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டன.
இதன் மூலம் அங்கு படிக்கும் 5,517 குழந்தைகள் பலன் அடைந்து வருகின்றனர். அதன்பின் காலை உணவு திட்டம் மேலும் சில பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை வந்திருந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணி அளவில் மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு அருந்திய உதயநிதி ஸ்டாலின், உணவின் தரம் எப்படி உள்ளது? குறைபாடுகள் உள்ளதா? என்பது தொடர்பாக குழந்தைகளிடம் அக்கறையுடன் விசாரித்தார்.
அப்போது அவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மதுரை:
அரசின் நிர்வாக பணிகள், வளர்ச்சி பணிகள், சட்டம்-ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்து வரும் அரசு பணிகள், நடந்து முடிந்த திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நிலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார்.
அவர் நேற்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொழில் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்து ரையாடினார். மாலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்கள், 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். செட்டிநாடு கட்டிட கலையை பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த அருங்காட்சியகத்தையும், அதில் இடம்பெற்று இருந்த தொல்பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 9 மணி அளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, மகளிர் திட்டம், வேளாண்மை, உழவர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம், நகர்ப்புற சுகாதார திட்டம், கல்லூரி மாணவர்களுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், தகைசால் பள்ளி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?, அந்தத் திட்டங்களின் மூலம் பயன்படும் பயனாளிகள் விவரம் உள்ளிட்டவைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் நேரடியாக கேட்டிருந்தார்.
மேலும் அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி சக்கரபாணி, தலைமைச் செயலர் இறையன்பு, கலெக்டர்கள் அனீஸ் சேகர் (மதுரை), ஜானி டாம் வர்கிஸ் (ராமநாதபுரம்), மதுசூதன் ரெட்டி (சிவகங்கை), விசாகன் (திண்டுக்கல்), ஷஜீவனா(தேனி) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் அருகே வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் ஜெயபாண்டி(31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயபாண்டியின் தாய் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரையூர் போலீஸ் சரகம் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற மகன் உள்ளார். பொன்னுத்தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத போது பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பொன்னுத்தாயின் மகன் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
- அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.
பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மாசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வர லிங்கம், நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார் செய்தனர். சுவாமியும்-அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து ''சிவாய நமக... சிவாய நமக...'' என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்-எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம்.தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி- சுந்தரேசவரர் கோவிலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது.
- ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
மதுரை, மார்ச் 5-
மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தினமும் காலை, மாலையில் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா வின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் பிரியாவிடையுடன் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்மனுக்கும் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இரவு திருக்கல்யாண கோலத்தில் யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசிவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை தேரோட்டம் நடந்தது. சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் இழுத்து வந்தனர். இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை (6-ந்தேதி) தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், 7-ந்தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் விடுத்த கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தி அங்கு 17 ரெயில் நிலையங்களை அமைத்து, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்டப் பாலம் கொண்டு வரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
மதுரை சக்கிமங்கலத்தில் சிட்கோ புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும். மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த விற்பனை சந்தைகளையும் புறநகருக்கு மாற்றி, நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மதுரை மையப் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படவுள்ளது. எனவே சிறைச்சாலை அமைந்த இடத்தை பசுமைப் பகுதியாக மேம்படுத்த வேண்டும்.
விரகனூர் சந்திப்பு, அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சந்திப்புகளில் புதிய மேம்பாலம் அமைக்க ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கு நடப்பு நிதியாண்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
மதுரை விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் சுரங்க பாலம் (அண்டர்பாஸ்) அமைக்க வேண்டும். கப்பல்-விமான மார்க்கமாக ஏற்றுமதி செய்யும் சரக்கு மீதான போக்குவரத்து கட்டணம் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி விலக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






