சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா
Published on

சோழவந்தான்

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மாசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வர லிங்கம், நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார் செய்தனர். சுவாமியும்-அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து ''சிவாய நமக... சிவாய நமக...'' என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்-எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம்.தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி- சுந்தரேசவரர் கோவிலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com