என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்மை தருவார்"

    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    மதுரை, மார்ச் 5-

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் காலை, மாலையில் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா வின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் பிரியாவிடையுடன் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்மனுக்கும் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இரவு திருக்கல்யாண கோலத்தில் யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசிவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை தேரோட்டம் நடந்தது. சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் இழுத்து வந்தனர். இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை (6-ந்தேதி) தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், 7-ந்தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×