search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pradosha festival"

    • கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி :

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷம் அதாவது சோமவார பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக் கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும். சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஐதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செங்கம்:

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனு பாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஷ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வினை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு இளநீர், பால், தேன் உள்பட மூலிகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபா ராதனை நடைபெற்றது.

    முன்னதாக கோவிலில் உள்ள மூலவர்களான ரிஷபேஷ்வரர், அனுபாம்பிகை, வள்ளி தெய்வானை சமேத முருக ப்பெருமான், நவகிரகங்கள் சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மாசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வர லிங்கம், நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார் செய்தனர். சுவாமியும்-அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து ''சிவாய நமக... சிவாய நமக...'' என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்-எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம்.தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி- சுந்தரேசவரர் கோவிலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டவுன் திருவத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலமான பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

    சனிப்பிரதோஷம் முன்னிட்டு அம்மையப்பன் அலங்காரம் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்து கோவில் வளாகத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி தண்டலபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விழா நடைபெற்றது.

    மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு சனிப்பிரதோஷம் விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கண்ணமங்கலம் பகுதியில் கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுக்கு நேற்று மாலை நடைபெற்றது. இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், எஸ் தாங்கல் சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுக்கு சிறப்பாக நடைபெற்றது.

    • 2008 ருத்ராட்சை அணிவித்து சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் எழுந்தருளிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உமா மகேஷ்வரி உடனுறையான கைலாயனாதர் கோயில் உள்ளது. இங்கு அனைத்து விதமான பிரதோஷம், சிவராத்திரி போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறும்.

    இதே போல் நேற்று மகா சிவராத்திரி பிரதோஷ விழாவை முன்னிட்டு உமா மகேஷ்வரி உடனுறையான கைலாயநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது 2008 ருத்ராட்ச மாலைகளை பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரையும் தரிசனத்திற்க்கு அனுமதிக்கப்பட்டது.

    இந்த விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.

    • பிரசித்தி பெற்ற கைலாச நாதர் கோவில் உள்ளது.
    • தொடர்ந்து கைலாச நாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாச நாதர் கோவில் உள்ளது. இங்கு, மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தயிர், பால், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கைலாச நாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கைலாசநாதர் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை நந்திபகவானுக்குபால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜை செய்து அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாட்டை பாண்டியநல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஜெயகோவி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவில் ஆனி மாத பிரதோஷம் பூஜை நடைபெற்றது. பிரதோஷம் பூஜை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அருகம்புல் மலர் மாலை மற்றும் பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த சிறப்பு பூஜையில் சோமசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×