வேதபுரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ விழா

ஏராளமான பக்தர்கள் தரிசனம் அன்னதானம் வழங்கப்பட்டது
வேதபுரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ விழா
Published on

செய்யாறு:

செய்யாறு டவுன் திருவத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலமான பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

சனிப்பிரதோஷம் முன்னிட்டு அம்மையப்பன் அலங்காரம் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்து கோவில் வளாகத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி தண்டலபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விழா நடைபெற்றது.

மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு சனிப்பிரதோஷம் விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம் பகுதியில் கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுக்கு நேற்று மாலை நடைபெற்றது. இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், எஸ் தாங்கல் சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுக்கு சிறப்பாக நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com