ஸ்ரீ சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ விழா

சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சோளிங்கர் அடுத்த சோம சமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் திருக்கோயிலில் பிரதோஷத்தின் போது நந்தி பகவான் படம்.
சோளிங்கர் அடுத்த சோம சமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் திருக்கோயிலில் பிரதோஷத்தின் போது நந்தி பகவான் படம்.
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவில் ஆனி மாத பிரதோஷம் பூஜை நடைபெற்றது. பிரதோஷம் பூஜை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அருகம்புல் மலர் மாலை மற்றும் பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் சோமசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com