ஆற்காடு ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்ததுஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆற்காடு ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
Published on

ஆற்காடு

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com