என் மலர்
மதுரை
- மதுரையில் இன்று காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
- மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முகாம் இன்று தொடங்கியது.
மதுரை
தமிழ்நாடு காவல்துறை குடும்ப உறுப்பினர்க ளுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பயிற்சி துறை, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு , இந்திய தொழில் கூட்டமைப்பு, வெளிநாட்டு மனிதவள நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை, வேலூர், கோவை, ஓசூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்காக மதுரை ஆகிய 6 இடங்களில் நடத்தியது.
தென்மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க், அறிவுறுத்தலின் படியும், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, வழிகாட்டுதலின் படியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், தென்மண்டல காவல் துறையினர், சிறை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று 25-ந் தேதியும் மற்றும் நாளை (26-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
இந்த முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியானநபர்கள் நுழைவுப்படிவம் பெற்று வருகைப்பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
முகாமில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
- ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ெரயில் விடப்படுகிறது.
- மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.
மதுரை
இந்திய ெரயில்வே உணவு சுற்றுலா கழகம் சார்பில் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு 'பாரத் கவுரவ்' சுற்றுலா ெரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ெரயில் மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும். இதனை தொடர்ந்து கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மே மாதம் 6-ந் தேதி ஒடிசா மாநிலம் பூரி செல்லும்.
அங்கு ஜெகநாதர் கோவில், கொனார்க் சூரிய கோவில் ஆகிய தலங்களில் தரிசனம் செய்யலாம். மே 8-ந் தேதி கொல்கத்தாவில் காளி கோவில் தரிசனம். 9-ந் தேதி பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜை. அதன் பிறகு மகா போதி கோவில் தரிசனம். மே 10-ந் தேதி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம். 11-ந் தேதி அயோத்தியா சரயு நதியில் நீராடி ராம ஜென்ம பூமி, அனுமன் கோவில்கள் தரிசனம். 12-ந் தேதி பிரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனுமன் கோவில் தரிசனம். 14-ந் தேதி சுற்றுலா ெரயில் மீண்டும் கொச்சுவேலி வந்து சேரும். இந்த சுற்றுலா ெரயி லுக்கான பயண சீட்டுகள் பதிவு நடந்து வருகிறது.
- சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
- காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வாடிப்பட்டி
கோவையில் இருந்து திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வந்தது. அங்கு பழங்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டது.
மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் இன்று காலை சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புளிநகர் கருப்பு கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார்.
அப்போது சமயநல்லூரில் இருந்து பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மீனா, மலர்விழி வள்ளியம்மாள் மற்றும் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நகரிக்கு சென்று கொண்டிருந்தது. இதை டிரைவர் முருகன் ஓட்டினார்.
அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில் ஆட்டோவின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படு காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
- முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.
மதுரை:
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து விழா தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.
- மதுரை மாநகர் நில அபகரிப்பு பிரிவில் 2021-ம் ஆண்டு கோபிலால் புகார் அளித்தார்.
- ராஜா செல்வராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் முறைகேடு வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை:
மதுரை கலைநகரில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர் கோபிலால். இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹிர் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தை வாங்கி வீடு கட்டினார்.
இந்த நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடத்தை கோசா குளத்தைச் சேர்ந்த ராமன் மகன் ராஜா செல்வராஜ் என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து மதுரை மாநகர் நில அபகரிப்பு பிரிவில் 2021-ம் ஆண்டு கோபிலால் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோபிலால் குறிப்பிட்ட இடத்தை வாங்குவதற்கு முன் ராமன் என்பவரது பெயரில் இருந்துள்ளது. ராஜா செல்வராஜ் தனது தந்தையின் பெயர் ராமன் என்ற ஒற்றுமையை பயன்படுத்தி மேற்படி இடத்துக்கு அவரது பெயரில் பட்டா பெற்றது தெரியவந்தது.
மேலும் இதற்கான பட்டா மாறுதலை கிராம நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் பால்பாண்டி ஆகியோர் ஆய்வு செய்து அப்போதைய துணை தாசில்தாராக இருந்த மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின்பேரில் பட்டா வழங்கியுள்ளனர்.
இதையடுத்து ராஜா செல்வராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் முறைகேடு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மீனாட்சி சுந்தரத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதாகி உள்ள மீனாட்சி சுந்தரம் தற்போது மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
- மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் அவதரித்த இங்கு பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் திருவாதவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வருடந்தோறும் விவசாயம் முடிந்தவுடன் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி விவசாய பணிகள் முடிந்த நிலையில் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், சிறுவர்-சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு முதலே கண்மாய் கரையில் திரண்டனர். இன்று காலை ஊர் பெரியவர்கள் கொடியசைத்ததுடன் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, உளுவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. சிலருக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்தன.
மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
- தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
மதுரை
மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது.
மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு போலீசார் குடும்பத்தினருக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கடந்த ஆண்டு 230 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 4009 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1054 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
எனவே மதுரையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மட்டும் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர், காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மதுரை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியு றுத்தி வந்தனர். இது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர் பாக எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம், சுகாதார போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், கல்யாண சுந்தரம், மணிகண்டன், பரஞ்சோதி, ராமசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தேர்தல் வாக்கு றுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- அமெரிக்கன் கல்லூரியில் உலக வன நாள் விழா கொண்டாடடப்பட்டது.
- வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் கூடுதல் வளாகத்தில் உலக வன நாள் விழா நடந்தது.கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கூடுதல் வளாக இயக்குனர் பால் ஜெயக்கர் வழிகாட்டு தலில் விழா கொண்டா டப்பட்டது. இதில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபோலா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
துணை வளாக இயக்குனர் திவா கரன் வரவேற்றார். உதவி வன பாதுகாவலர் ராஜா காடுகளை பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்கையும், முக்கியத்து வத்தையும் விளக்கிப் பேசினார். வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப் நன்றி கூறினார். பிறகு வன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி கள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் மணிவண்ணன், அகில், வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப், கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்ட இயக்கு னர் ராஜேஷ், மதுரை மாவட்ட வன அதிகாரி களோடு இணைந்து செய்திருந்தனர்.
- மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம் நாளை 3 மண்டலங்களில் நடக்கிறது.
- மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாநகராட்சி சார்பில் நாளை (மார்ச் 25-ந் தேதி), கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மண்டலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 (கிழக்கு) வார்டு எண்.16 முல்லை நகர் தனபால் உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 2 (வடக்கு) வார்டு எண்.22 தத்தனேரி மாநகராட்சி
திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.75 சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பபள்ளி ஆகிய 3 இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்வார்கள்.மேலும் ரத்த எச்.பி. அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய், புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரை அளவு, கொரோனா சளி பரிசோதனைககளும் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
- இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனும தித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார்.
இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.
மேலும் ஆஸ்பத்திரியில் அடிக்கடி செல்போன் திருட்டு நடந்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் நவீன்குமாரின் செல்போனை ஒரு முதியவர் திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட விவேகானந்தன்(59) என்பவரை கைது செய்தனர். அவர் திருடிய செல்போனை போலீசார் மீட்டு நவீன்குமா ரிடம் ஒப்படைத்தனர். போலீசில் சிக்கிய முதியவர் அரசு ஆஸ்பத்திரியில் அடிக்கடி தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
- மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளா கத்தில் நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கி றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்று பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை தாங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி தொடக்கவுரை ஆற்றுகிறார்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜு தொடங்கி வைத்து பேசுகிறார்.
பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
முடிவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறுகி றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ப தற்காக நாளை சென்னை யில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணி அளவில் மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்ற னர். பின்னர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் மதுரை மாவட்ட கோர்ட்டு வளா கத்துக்கு காரில் செல்கிறார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன. இதில் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு மதுரை சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை நகரில் 1,500 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






