தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்
Published on

மதுரை

மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது.

மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு போலீசார் குடும்பத்தினருக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கடந்த ஆண்டு 230 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 4009 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1054 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

எனவே மதுரையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மட்டும் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர், காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com