search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா
    X

    மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா

    • மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளா கத்தில் நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கி றது.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்று பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை தாங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி தொடக்கவுரை ஆற்றுகிறார்.

    பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜு தொடங்கி வைத்து பேசுகிறார்.

    பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறுகி றார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ப தற்காக நாளை சென்னை யில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணி அளவில் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்ற னர். பின்னர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் மதுரை மாவட்ட கோர்ட்டு வளா கத்துக்கு காரில் செல்கிறார்.

    இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன. இதில் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு மதுரை சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை நகரில் 1,500 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×