என் மலர்
மதுரை
- திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
- திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மதுரை
மதுரை மேல வெளி வீதி ெரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து மேலமதுரை கிராம உதவியாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்த முதியவர் சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(63) என்பதும், சித்திரை திருவிழா பார்ப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தபோது ெரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது.
- மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
ஆனையூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மனைவி கமலலலிதா(56). நேற்று இவர் கள்ளழகர் சப்பரம் பார்ப்பதற்காக, கலைஞர் நகருக்கு வந்தார். மீனாட்சி குடியிருப்பு அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த கமலலலிதாவிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மேலூர் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் மேலூர் யூனியன் அலுவல வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து விட்டு பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்அலை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பதவி பிரமாணத்தை மீறி விட்ட கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
- மத்திய அரசுக்கு அ.தி.ம.மு.க. கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு திராவிட மக்களின் உணர்வுகளையும், தமிழர்களின் அமைதி யையும் சீர்குலை க்கிறது. மக்களால் நூறாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சனாதன கொள்கையை கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கவர்னர் தூக்கி பிடிக்க நினைப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கதாகும்.
திராவிட மாடலின் உன்னதமான புதுமைப் பெண் திட்டத்தின் காரண மாக உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கை பற்றாளர் கவர்னர் பொறாமை படுகிறார்.
எனென்றால் பெண் கல்வி அவரது சனாதனத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டின் கல்வியை குறை கூறி வருகிறார். தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திலேயே அமைதி பூங்காவாக திகழ்கிறது.
ஆனால் மாநில அரசின் அங்கமாக இருக்கும் கவர்னர் மாநில அரசையே தவறாக குற்றம் சொல்வது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ப தையும் கவர்னர் பதவிக் கான இலக்கணத்தையும் அவர் தெளிவு படுத்த வேண்டும்.
மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு தான் மேற்கொண்ட பதவிபிரமாணத்தை மீறி கவர்னர் ரவி பொது வெளியில் அரசின் நிர்வாக விவரங்களை தொடர்ந்து சொல்லி வருவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் கவர்னருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பி வரும் நிலையில் திராவிடமே உயிர் மூச்சாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களி டையே பாசிச, வகுப்புவாத சனாதனத்தை திணிக்க நாள்தோறும் நாலாந்தர பேச்சாளராக கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டு ரவி கூறி வருவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடையே ஆபத்தான விஷக்க ருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் கவர்னரை ஒன்றிய அரசு உடனே திரும்பபெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை அருகே ரெயில் மோதி பலியான வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை- கீழ் மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 3-ந் தேதி இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? என்ற ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வலது பக்க வயிற்றில் கருப்பு மச்சமும், வலது கால் முட்டிக்கு கீழ் பழைய காயத்தழும்பும், கருப்பு மச்சமும் காணப்படுகிறது. இதுகுறித்து மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள்கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.அதன்படி இன்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
வைகை பாலம் அருகில் உள்ள எம்.வி.எம். மருது மகால் முன்பு, பா.ஜ.க. விவசாயி மாநில துணைத் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை வரவேற்றனர்.
பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று இரவு வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலி யார்கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்புள்ள மண்டகப்படிக்கு வந்து சேரும்.
யாதவர்கள் சங்கத்தின் சார்பில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.நாளை இரவு சனீஸ்வர்ன கோவில் முன்பு முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும்.
- திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது.
- அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு மார்த்தாண்டம், தக்கலை, ஞாறாம்விளை, திக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது விஜய் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. அது செயல் பாட்டில் வந்தால் வர வேற்கலாம். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருக்கிறது. குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கனிமவள கடத்தல் நடைபெற்ற போது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியவர்கள் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கனிமவள கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிர தோஷம், பவுர்ணமி, அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந்தேதி) வரை அனுமதி வழங்கப்பட்டன.
இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பறை மலைப்பாதை வழியாக மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப் பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவுடன் தாணிப்பறை அடிவார பகுதிக்கு வந்து விட வேண்டும் எனவும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
- தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது.
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது.
மீனாட்சி அம்மன் கோவிலில் 2-ந் தேதி திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடந்த நிலையில் 12 நாள் சித்திரை திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் திருவிழா தொடங்கிய கடந்த 1-ந் தேதி மாலை 6 மணிக்கு அழகர் தோளுக்கினியானாக திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு பக்தர்களுக்கு 2 நாட்கள் காட்சி கொடுத்தார். அதன் பிறகு 3-ந் தேதி சுந்தர்ராஜ பெருமான் உள்பிரகார அலங்கார மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு புறப்பட்ட அவருக்கு கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு உள்ளிட்ட வித விதமான ஆயுதங்கள் செறிந்த கள்ளழகர் திருக்கோலம் அணிவிக்கப்பட்டது. அடுத்தபடியாக கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
முன்னதாக காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெறும் சடங்கு நடத்தப்பட்டது. அதன் பிறகு கள்ளழகர் சர்வ அலங்காரம், படை பரிவாரங்களுடன் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கொண்டப்ப நாயக்கன் மண்டபம், பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம், சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபம், கடச்சனேந்தல் வழியாக தங்க பல்லக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மதுரை மூன்று மாவடியில் நேற்று கள்ளழகர் எதிர்சேவை நடந்தது.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகருக்கு எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி பெண்கள் அழகருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
அதன் பிறகு கே.புதூர் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியப்பன் கோவில், அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு இரவு 9 மணிக்கு வந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டது. கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்வதற்காக ஏற்கனவே அழகர் கோவில் நூபுர கங்கையில் இருந்து தீர்த்தம், தலைச்சுமையாக தல்லாகுளத்துக்கு எடுத்து வரப்பட்டு இருந்தது.
இதன் மூலம் கள்ளழகருக்கு இரவு 12 மணி வரை திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பிறகு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அழகருக்கு அலங்காரம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகரின் அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டி கொண்டுவரப்பட்டது.
அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருந்தன. கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார்.
தலைமை பட்டரின் கையில் பச்சை புடவை வந்தது. இதையடுத்து பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வெட்டிவேர் சத்திரத்தில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கள்ளழகர், கருப்பணசாமி கோவில் எதிரே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 100 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
அதன் பிறகு கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்டார். அப்போது கருப்பணசாமி வேடமணிந்த பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆடிப்பாடியும் கள்ளழகரை வரவேற்றனர். ஆழ்வார்புரம் வைகை ஆற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வந்த போது, வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.
பின்பு அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். அதனை பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மேலும் ஆற்று தண்ணீரை வாரி இரைத்தனர். 'கோவிந்தா... கோவிந்தா...' என்று கோஷம் எழுப்பினா்ாகள். பலர் பக்தி பரவசத்தில் நடனமாடினர். அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வீரராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகபடிகளில் கள்ளழகர் மற்றும் வீரராக பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து ராமராயர் மண்டகபடிக்கு கள்ளழகர் புறப்பட்டு சென்றார். ராமராயர் மண்டகப்படியில் இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பை போக்கும் வகையில் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.
பின்னர் வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு வண்டியூர் பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
அழகர் ஆற்றில் இறங்குவதை காண லட்சணக்கானோர் திரண்டதால் மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். நகரின் பல இடங்களில் ஆங்காங்கே மருத்துவ குழுவினரும், ஆம்புலன்சு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
- மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலியானார்.
- கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கே.புதூர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் முத்தையா (56). இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது தவறுதலாக மின்சார பெட்டியை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் பீட்டர் (30). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. எனவே அவர் சுயமாக தனக்குத்தானே ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும்.
- எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.
மதுரை
மதுரை நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் கனகேஸ்வரி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாவின்போது 5 வகையான உணவுகளை அன்ன தானமாக பக்தர்க ளுக்கு வழங்கி வருகிறேன். அந்த உணவுகளை சுற்றுச் சூழலுக்கு எவ்விதமான விளைவையும் ஏற்படுத்தாத வகையில் வழங்கி வருகிறேன். எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.
இந்த ஆண்டும் அன்ன தானம் 20,000 செலவு செய்துள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரை சித்திரை திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவோர் உணவுப் பாதுகாப்பு துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.
இதற்கு முன்பு நடைபெற்ற சித்திரை திருவிழாக்களில் இது போன்ற அறிவிப்பு வெளி யிடப்படவில்லை. அதோடு மாவட்ட கலெக்டரின் இந்த அறிவிப்பு நாளிதழ்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள் ளது. வேறு எந்த சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படவில்லை. இதனால் ஏராளமானவர்கள் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை.
எனவே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில், பிற சமய விழாக்களின் போது இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? 5 லட்சம் மக்கள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த விதியை அமல்படுத்தி, சரிபார்ப்பது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி, மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை நடைமுறைப் படுத்துங்கள் என அறிவு றுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
- சித்திரை திருவிழாவை குளிர வைத்த மழையால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
- மழையை பொருட்படுத்தாமல் வழக்க மாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் திரண்டதை காணமுடிந்தது.
மதுரை
மதுரையில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பகல் முழுவதும் கொளுத்திய வெயிலால் இரவு நேரங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று, புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. வழக்கமாக ஆழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று மதுரையில் மழை பெய்யும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. அதன்படி கடந்த காலங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது மழை பெய்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலை தணிக்க மழை பெய்யும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர். சித்திரை திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை மதுரை நகர் முழுவதும் மழை அடித்து கொட்டியது. ஒரு மணிநேரத்திற்கும் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் மதுரை நகரில் அதுவரை நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. தொடர்ந்து விழா தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை மாலை நேரங்களில் அவ்வப்போது கன மழை முதல் தூரல் மழை பெய்தது.
இதனால் கோடை என்பதையே மக்கள் மறந்து போகும் அளவுக்கும் மழை இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து பகல் நேரங்களில் மேக மூட்டத்துடனும் காணப் பட்டது.
ஆனால் சுவாமி- அம்பாள் வீதி உலா மற்றும் முக்கிய திருவிழா நிகழ்ச்சி கள் மழையால் தடை படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் மழையை பொருட் படுத்தாமல் வழக்க மாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் திரண்டதை காணமுடிந்தது.
- மதுரையில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
- மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடத்தினார்.
மதுரை
மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில் 9-வது வார்டில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் திருப்பதி, பா.ஜ.க. கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்தர், கண்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசம்பன், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவா சன், மாநில கூட்டுறவு பிரிவு மாணிக்கம், கல்வாரி தியாகராஜன், நாகராஜன், செல்வ மாணிக்கம் உள்பட கலந்து கொண்டனர்.






