search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
    X

    சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு தல்லாகுளம் பகுதியில் அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். அருகில் அவரது மனைவி ஜெயலட்சுமி, தல்லாகுளம் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

    கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்

    • பதவி பிரமாணத்தை மீறி விட்ட கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
    • மத்திய அரசுக்கு அ.தி.ம.மு.க. கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு திராவிட மக்களின் உணர்வுகளையும், தமிழர்களின் அமைதி யையும் சீர்குலை க்கிறது. மக்களால் நூறாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சனாதன கொள்கையை கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கவர்னர் தூக்கி பிடிக்க நினைப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கதாகும்.

    திராவிட மாடலின் உன்னதமான புதுமைப் பெண் திட்டத்தின் காரண மாக உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கை பற்றாளர் கவர்னர் பொறாமை படுகிறார்.

    எனென்றால் பெண் கல்வி அவரது சனாதனத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டின் கல்வியை குறை கூறி வருகிறார். தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திலேயே அமைதி பூங்காவாக திகழ்கிறது.

    ஆனால் மாநில அரசின் அங்கமாக இருக்கும் கவர்னர் மாநில அரசையே தவறாக குற்றம் சொல்வது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ப தையும் கவர்னர் பதவிக் கான இலக்கணத்தையும் அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு தான் மேற்கொண்ட பதவிபிரமாணத்தை மீறி கவர்னர் ரவி பொது வெளியில் அரசின் நிர்வாக விவரங்களை தொடர்ந்து சொல்லி வருவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

    தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் கவர்னருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பி வரும் நிலையில் திராவிடமே உயிர் மூச்சாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களி டையே பாசிச, வகுப்புவாத சனாதனத்தை திணிக்க நாள்தோறும் நாலாந்தர பேச்சாளராக கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டு ரவி கூறி வருவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடையே ஆபத்தான விஷக்க ருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் கவர்னரை ஒன்றிய அரசு உடனே திரும்பபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×