என் மலர்tooltip icon

    மதுரை

    • பார் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறிக்கப்பட்டது.
    • தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    உத்தப்பாளையம் அனுமந்தம்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் நிவாஸ் (28).இவர் பழைய அக்ரகாரம் தெருவில் செயல்பட்டுவரும் பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்து பறித்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நிவாஸ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கோரிப்பாளையம் சம்புரோபுரம் 3-வது தெருவை சேர்ந்த கிஷோர் (21), விக்னேஸ்வரன் என்ற விக்கி (23), மருதுபாண்டி (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • ேகாவிலுக்குள் ஒடிசா வாலிபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மந்தை அம்மன் ேகாவில் என்கின்ற ஆதி பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் கோவிலின் கதவுகளை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்ப வர்கள் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் பூட்டிய கோவிலுக்குள் இருப்பதையும், அவர் விளக்குகள் ஏற்றக்கூடிய பகுதியில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைந்து போட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் நிர்வாகி ராமசாமியை அழைத்து கோவில் பூட்டை திறந்து கோவிலுக்குள் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது. அவரிடம் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம வாலிபர் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த சம்பவம் அவனி யாபுரம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க அமைப்பு தினத்தையொட்டி கொடியேற்று விழா யூனியன் அலுவலகத்தில் நடந்தது.

    அதன்பின் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் குழுவினரிடம், சத்துணவு பணியாளர்கள், சத்துணவு சமையல் கூட சாவியை ஒப்படைக்க சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு வழங்கினர்.

    சங்கத்தின் ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமையில் செயலாளர் பிச்சையம்மாள் கோரிக்கை விளக்கமளித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி. துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.

    • குப்பை கழிவு மறுசுழற்சி பயன்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளுக்கான மறுசுழற்சி பயன்பாட்டு மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எதிர்புறம் உள்ள நாடக மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தை பேரூராட்சி தலைவர்ஜெயராமன் தொடங்கி வைத்தார். மேலும் அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோர்களுக்கு வழங்கினார்.

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மையத்தை தொடர்ந்து பயன்படுத்தி தேவையற்ற பொருட்களை இங்கே ஒப்படைத்து தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும்பாலான கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசு குறையும். பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கழிவுகளை தரம் பிரித்து வழங்கியும், பயன்படாத பொருட்களை இந்த மையத்தில் கொடுத்தும் தூய்மையான நகரமாக பேரூராட்சியை மாற்ற உதவ வேண்டும் என்று செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் ராஜபிரபு (வயது 30). இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மகன் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகளால் பெருமாள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். "இப்படி ஒரு மகனை உயிரோடு வைத்திருப்பதைவிட கொன்று விடுவது நல்லது" என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த மகனை தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்து சென்று அவரது கை, கால்களை கயிறால் கட்டி பெற்ற மகன் என்றும் பாராமல் கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி ராஜபிரபு பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜபிரபு உடலை மீட்டனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலும் பலியான ராஜபிரபு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொட்டக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர். இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மதுரை:

    சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் அபிநந்தனா(வயது15). 10-ம் வகுப்பு மாணவி. கூடைப் பந்து வீராங்கனையான அபிநந்தனா விருதுநகரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 15-ந் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயிலில் விருதுநகர் வந்துள்ளார்.

    அவருடன் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வந்துள்ளனர். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த போதிலும் முழுமையாக குணமடையவில்லை.மேலும் அவரால் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்ற முடியவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் நடைபெற்ற போட்டிகள் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் 4 பயிற்சியாளர்கள் மற்றும் 24 மாணவ-மாணவிகளுடன் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு இன்று பஸ்சில் வந்துள்ளார். பின்னர் திருமங்கலத்தில் இருந்து பஸ்சில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் மதுரை ரெயில் நிலையத்திற்கு அபிநந்தனா சென்றார்.

    அவர்கள் சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அபிநந்தனா திடீரென மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர்.

    இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.
    • கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    மேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் வி.எஸ்.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள்கள் விஜய லட்சுமி(வயது48), பூங்கொடி(45).

    இவர்களில் விஜய லட்சுமிக்கு திருமண மாகவில்லை. பூங்கொடிக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவர் சின்னையா மற்றும் மகன் பகவதி(23), சந்தியா(19) ஆகியோருடன் அதே ஊரில் வசித்து வந்தார்.

    விஜயலட்சுமியும், பூங்கொடியும் சமையல் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் உள்ளூர் மட்டு மின்றி வெளியூர்களுக்கும் சமையல் வேலைக்காக சென்று வந்திருக்கின்றனர்.அதேபோல் நேற்று மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்திற்கு சமையல் வேலைக்காக வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கபெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல திட்டமிட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது அவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

    இதனால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்தனர். பெண்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்ததை அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் பார்த்தனர். இருவரையும் அவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    இதுகுறித்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்குவாரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. பின்பு இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. சகோதரிகள் இருவரும் கல்குவாரியில் மூழ்கிய தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவே ஒத்தக்கடை பகுதிக்கு வந்தனர்.

    மேலும் ஏராளமான பொதுமக்களும் கல்குவாரியில் திரண்டனர். அவர்களின் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். ஒத்தக்கடை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இந்நிலையில் கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சகோதரிகளின் உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதனை தொடர்ந்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுைர மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • மண்டலத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே மாயமான லாரி டிரைவர் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

    ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் நாவினிப்பட்டி அருகே உள்ள சின்ன ஆலங்குடி கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தார். அவர் சாலையோரம் பிணமாக கிடப்பதை இன்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

    அவர்கள் அதுபற்றி மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாயமாகி தேடப்பட்டு வந்த நிலையில் நாகராஜன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்பதால், அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

    • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

    மதுரை

    திடீர்நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் சாலமன் ராஜா (40). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு மனைவி மறுத்துவிட்டார். இதில் மனமுடைந்த சாலமன் ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்த முகமது இக்பால் மகன் முபிஸ் ரகுமான் (24). இவருக்கு சிறு வயது முதல் உடல் நலக் கோளாறு இருந்தது. மூச்சு திணறலும் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வாலிபர் முபிஸ்ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.
    • அரிய வகை உயிரினங்கள் இந்த பகுதியில் உள்ளன.

    மதுரை

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இடையபட்டி தெற்கு பகுதி அம்முர் உள்ளடக்கிய வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடைபயணம் நடந்தது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    இந்த நடை பயணத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் பல்லுயிர் வாழும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இடைய பட்டியை தேர்வு செய்து இங்கு இந்த விழிப்புணர்வு பயணத்ைத நடத்துகிறோம். இது கடம்ப மரம் உள்ளிட்ட பல மரங்கள் கொண்ட சமவெளி காடு ஆகும்.

    இங்கே பல்லுயிர்கள் இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நடை பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்த பகுதியில் பல்வேறு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் வாழுகின்ற இடமாக இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சமவெளி காட்டில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் இருக்கிறது. இங்கு கடம்ப மரம் மட்டுமின்றி உசிலை, குறுந்தம், நெய் குறுந்தம், பூவந்தி போன்ற மரங்களும் இருக்கிறது. இங்கு மருத்துவ குணம் கொண்ட காந்தன், விருது விராலி, மருள், சிறு குஞ்சன் போன்ற மூலிகை செடிகளும் உள்ளன.

    இது தவிர தேவாங்கு, முள் எலி, எறும்புத்தின்னி, புள்ளிமான், காட்டுப்பன்றி போன்ற அரிய வகை உயிரினங்களும் இந்த பகுதியில் உள்ளன.

    எனவே இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள முக்கியத்துவம் கருதி இங்குள்ள காட்டு பகுதிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், இங்குள்ள நீர் நிலைகள், மரங்கள், பூச்சிகள் எல்லாமே நாம் வாழுகின்ற உலகத்தில் அனைத்து உயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×