பார் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறிப்பு

பார் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறிக்கப்பட்டது. தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
பார் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறிப்பு
Published on

மதுரை

உத்தப்பாளையம் அனுமந்தம்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் நிவாஸ் (28).இவர் பழைய அக்ரகாரம் தெருவில் செயல்பட்டுவரும் பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்து பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நிவாஸ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கோரிப்பாளையம் சம்புரோபுரம் 3-வது தெருவை சேர்ந்த கிஷோர் (21), விக்னேஸ்வரன் என்ற விக்கி (23), மருதுபாண்டி (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com