என் மலர்tooltip icon

    மதுரை

    • இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்

    வாடிப்பட்டி

    மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மந்தை திடலில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர்கள் கராத்தே சிவா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் வரவேற் றார். இந்த முகாமில் கிருஷ்ணன் கோவில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுவாதி தலைமையில் செவிலியர்கள் ராஜேஸ்வரி. சங்கரேஸ்வரி, தாமரைச்செல்வி, ஜெயராணி, ஜெயகர் ஆகியோர் 120 பேருக்கு கண் பரி சோதனை செய்தனர். அதில் 108 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் எம்.ஏ.முத்து, ராஜேந்திரன், கார்த்திகேயன், முத்துகாமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.

    • மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் நிதி கிடைக்காததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
    • நிதி, தேக்கம், Finance, stagnation,

    வாடிப்பட்டி

    மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் நிதி வராததால் தொடர் பணிகள் தொடங்குவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 420 ஊராட்சி மன்றங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் பொதுமக்கள் கண்மாய், ஊரணி, கால் வாய் சீரமைப்பு பணி, மரக்கன்று நடும் பணிகள் செய்து வந்தனர்.

    அதன்பின் தற்போது சிறு, குறுபாலம் கட்டும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணி, தடுப் பணை கட்டும் பணி, மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டும் பணி, சத்துணவு கூடங்கள், ஊட்டச்சத்து மைய கட்டிடங்கள் மரா மத்து பணி என்று தொடர்ச் சியாக பல பணிகள் செய்யப் பட்டு வருகிறது.

    இந்த பணிகளுக்குரிய திட்ட மதிப்பீடுகளுக்கு ஏற்ற படி நிதிகள் கிடைக்க தாம தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி செய்த ஒப்பந்தக்காரர்கள் அடுத் தடுத்து தொடரும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்வதில் தேக்கம் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பணி களை விரைந்து முடிக்க அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.
    • மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரில் சந்தைப்பேட்டை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சந்தை நடைபெறும். இதில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    மேலூர்-திருச்சி மெயின்ரோட்டில் இந்த சந்தைப்பேட்டை அமைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இதனால் இந்த சந்தையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.

    மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலே சந்தை பகுதி கூட்டமாக காணப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த ஆடுகள் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஆடுகளில் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை ஜோராக நடந்ததுடன் ஆட்டுச்சந்தை களை கட்டியது.

    • தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது.
    • அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கேரளா சின்னக்கானல் பகுதியிலும், தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர்.

    பின்னர் அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு விட்டனர். அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை அந்த பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. முத்துக்குளி வயல் பகுதியில் இயற்கை உணவு அதிகம் கிடைத்து வரும் நிலையில் அங்கேயே யானை உள்ளது. விடப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.

    யானை கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு நெல்லை, குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்களும், வனத் துறை ஊழியர்களும் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதற்கு வனத்துறையினர் யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று தெரிவித்திருந்தனர். அரிசி கொம்பன் யானை சுற்றி வரும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குட்டி யானை உட்பட 3 யானைகள் உள்ளது. அந்த யானையுடன் அரிசி கொம்பன் யானையை இணைக்கவும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    அரிசி கொம்பன் யானை மிகவும் ஆரோக்கியத்துடன் தனது வாழ்விடத்தில் வசதியாக உள்ளதாக மாநில வனத்துறை செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து களக்காடு சரணாலயத்தின் துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது. கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானையானது காட்டுப் பகுதியில் விடப்பட்ட பின்பு 20 நாட்களாக மூணாறு வனப்பகுதி போன்ற வாழ்விடம் களக்காட்டிலும் உள்ளதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவை எடுத்துக் கொண்டும் சுதந்திரமாக உலாவியும் வருகிறது.

    அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். களக்காடு சூழலுக்கு ஏற்றவாறு யானையை பழக்கப்படுத்த வனத்துறை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிசி கொம்பன் யானையை தினந்தோறும் கண்காணித்து வரும் களப் பணியாளர்கள் யானை நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்திரகாளி அம்மன், பாரைகருப்பு அய்யனார் கோவிலில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்த முதல் மரியாதையை பெறுவது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை ஊர் பொதுமக்கள் தடுத்து சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஒரு கும்பல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டு மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதில் வீட்டின் ஜன்னல் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின.

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் அந்த கும்பல் தீ வைத்தது. இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது வேல்முருகன் தரப்புக்கும், பொன்னம்பலம் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் (40) மற்றும் சுப்பையா (68), சூர்யா (23), விஜய் (27), வேல்விழி (35) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் வேல்முருகன் தரப்பை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பிலும் எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பழனிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க.வை சேர்ந்த கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜ்மோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் நிலவிவரும் பதட்டத்தை தணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடன் தொல்லையால் ெரயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்தார்.
    • 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது.

    மதுரை

    மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(38) கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு மாரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் சம்பந்தமாக வாங்கிய கடனை தர முடியாத நிலையில் தவித்து வந்த இவர் பைக்காரா 7-வது ெரயில்வே பாலத்தில் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதைதொடர்ந்து ரெயில் முன் பாய்ந்த அவரை ெரயில் மோதியதில் துண்டு, துண்டாக சிதறியது 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் ெரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராகுல் காந்தியில் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியில் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை 44-வது வார்டு சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வார்ட்டு தலைவர் ஹேம லதா முத்துப்பாண்டியன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு பரிமாறப்பட்டது.

    இதில் மாவட்ட துணை தலைவர் மலர் பாண்டியன், பகுதி தலைவர் சுந்தர், மாவட்ட செயலாளர் காசி ராஜன் மற்றும் நிர்வாகிகள் சூரிய நாராயணன், நாஞ்சில், பால் சோசப், மகேஸ்வரன், கண்ணன், வார்டு தலைவர் வேல்முருகன், அப்பாஸ் அலி, மாநில பேச்சாளர் சிதம்பர பாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    • பிறந்தநாள் பார்ட்டிக்கு தந்தை பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பாலை சக்கிமங்கலம் கரந்தமலை நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அய்யனார் (வயது21). இவருக்கு நிரந்தர வேலை இல்லை. இந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் வந்தது. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அய்யனார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின்தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் சோமஸ் கந்தமூர்த்தி (45). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோமஸ் கந்தமூர்த்தியின் மகள் ஹம்சவாகினி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.

    மதுரை

    மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). இவர் தெற்கா வணி மூல வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2பெண்கள் வந்த னர். அவர்கள் கடையில் ½பவுன் தோடு வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் காம ராஜர் சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்த சிவகுமார் (48) என்பவர் தெற்கு சித்திரை வீதியில் நடத்தி வரும் கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து ¾பவுன் தோடு திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்தும் கடை உரிமையாளர் சிவக்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ேமலும் கடை உரிமை யாளர்களும், போலீசாரும் கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளிலும் நகையை திருடிச்சென்றது அதே பெண்கள் தான் என தெரியவந்தது.

    அவர்கள் யார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே திருடி மாட்டிக் கொள்ளா ததால் தங்களை அடையா ளம் தெரியவில்லை என அந்த திருடிகள் நம்பியுள்ள னர். இதனால் தைரியமாக மீண்டும் கைவரிசை காட்டு வதற்காக நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.

    ஏற்கனவே திருடிய நகைக்கடை வழியாக சென்றபோது கடையின் உரிமையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டு விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணை யில், அவர்கள் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 4-வது தெருவை சேர்ந்த செல்லம் மகள் தரணி (32), சக்கரா நகரை சேர்ந்த ஜெகதீஷ குமார் மனைவி சந்தியா (27) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ்நாடு அனைத்து துறை 4-ம் பிரிவு ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் களுக்கென தனி கேண்டீன் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர் நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர் களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் செக்கானூரணி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    மதுரை அருகே உள்ள தேன்கல்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தேன்கல்பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானுாரணி-திருமங்க லம் மெயின் ரோட்டில் உள்ளது.

    இப்பகுதியில் இறந்தவர் களை மயானத்தில் அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிர தாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்ற னர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மின் மயானமாக மாற்றினால் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

    மேலும் மின் மயானம் அமைந்தால் நாளடைவில் எங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் படிப்படியாக குறையும். பின்வரும் சந்ததிகளுக்கு இப்பகுதி மக்களின் பாரம் பரியம் தெரியாமல்போகும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    திண்டுக்கல் மெயின்ரோடு விசாலாட்சி மில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அதில்அவர்கள் மேலப்பொன்னகரம் 2-வது தெரு கோவிந்தசாமி, சுரேஷ் (32), அரசன் (53), சாகுல்ஹமீது (43), லட்சுமணன் உள்ளிட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்தனர். 

    ×