காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
Published on

மதுரை

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ்நாடு அனைத்து துறை 4-ம் பிரிவு ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் களுக்கென தனி கேண்டீன் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர் நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர் களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com