என் மலர்
மதுரை
- தென் மாவட்டங்களுக்கு மோசமான நிலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.
மதுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு புறம் தொடங்கியிருக்க வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்க ளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்திருந்த நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் பட்டியலில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரைக்கு பல்வேறு ஊர்க ளில் இருந்தும், அண்டை மாவட்டங்களை சேர்ந்த வர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள்.
இதற்காக அவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால் அரசு பேருந்துகளின் நிலைக்கு பயந்து தற்போது பயணத்தை ரத்து செய்யும் அளவுக்கு அச்சமடைந்துள்ளனர். காரணம் சற்றும் பராமரிப்பில்லாமல் அசாதாரண பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ள அரசு பஸ்களின் நிலை தான் என்று புகார் எழந்துள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு எந்த வித சிரமமும் இன்றி வெளியூர்களுக்கு பயணிக்கலாம் என்ன அரசு உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்துமே துளியும் பராமரிப்பு இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கூரை பெயர்ந்தும், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாமலும் பல பேருந்துகள் உள்ளதால் மழைக்காலங்களில் அதில் பயணம் செய்பவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. வழி நெடுகிலும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து மிக கனமழை பெய்தது. இதனால் பஸ்சின் மேற்கூரையிலிருந்து குழாயை திறந்தது போல் தண்ணீர் கொட்டிக் கொண்டே வந்தது. மேலும் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாததால் பேருந்துக்குள் மழை பெய்தது போன்று தண்ணீர் பாய்ந்தது.
இதன் காரணமாக இருக்கைகள் இருந்தும் பயணிகள் அமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த குடையை விரித்தும் பஸ்சில் பயணம் செய்த னர். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாடை வாங்கிவிட்டு திரும்பிச் சென்ற பயணிகள் பேருந்துக்குள் கொட்டிய மழை நீரால் புத்தாடை நனைந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.
சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை-தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்து இவ்வளவு மோசமான நிலையில் இருந்தால் பயணிகள் எப்படி பயணம் செய்வார்கள் என்பதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக் கொண்டனர்.
இது பற்றி மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, இந்த பேருந்து இன்று இரவுடன் சேவையை நிறுத்திக் கொள்ளும் என்றும், பயணிகள் மாற்று பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன் இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.
- உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் வீர பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடம் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள நிலம் ஓட்டக்கோவில் பாறை செங்குளம் ஊரணி மற்றும் சவுந்தரபாண்டியன் கரடு என வருவாய்த்துறை ஆவணத்தின்படி உள்ளது. இந்த இடங்களில் உள்ள பாறையை சுற்று வட்டார கிராம விவசாயிகள் தானியங்களை உலர்த்தும் களமாகவும், போக்குவரத்துக்கு பொதுப்பாதையாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்றவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் வீர பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ராணுவ வீரர் வீட்டில் ரூ. 10 லட்சம்-10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
- உசிலம்பட்டி பகுதியில் நடந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்து பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 58). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் வீட்டின் தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.
இன்று காலை செல்லப்பாண்டி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவருக்கும் உசிலம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப் பட்டன.
கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உசிலம்பட்டி போலீசார் கொள்ளை யர்களை பிடிக்க நடவ டிக்கை எடுத்து வரு கின்றனர். அதன்படி கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வெளியூர் சென்றுள்ள செல்லப்பாண்டி வீடு திரும்பிய பின்பு தான் கொள்ளை போன நகை -பணத்தின் முழுமையான மதிப்பு தெரிய வரும் என தெரிகிறது.
உசிலம்பட்டி பகுதியில் நடந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.
பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அவனியாபுரம்-பெருங்குடி 4 வழிச் சாலை இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை
மதுரையின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஒன்றாக அவனியாபுரம் விமான நிலைய சாலை மாறியிருக்கிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வி.வி.ஐ.பிக்கள், வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், வர்த்தக பிரதிநிதிகள் அனைவரும் அவனியாபுரம் விமான நிலைய சாலை வழியாகவே செல்கின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரமுகர்களும் இந்த சாலை வழியாகவே விமான நிலையம் செல்ல வேண்டும். துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருவோர் அதிகரித்துள்ளனர். அதனால் இந்த சாலையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
மேலும் தெற்கு வாசலில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையில் வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரை 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருக்கின்றன. பிரபலமான தியேட்டர், வணிக வளாகங்கள் இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருப்பதினால் முகூர்த்த நாட்களில் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையிலே நிறுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு பயணிகள் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பெருங்குடியில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது பெருங்குடியில் இருந்து அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அவனியாபுரம் - பெருங்குடி 2.5 கி.மீ. தூர சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த சாலையின் நடுவே சில மின் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றி சாலையோரத்தில் அமைக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியை தமிழக மின் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களிடம் மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மின் வாரியம் மதிப்பீட்டை இறுதி செய்து வழங்காமல் உள்ளது. அதனால் இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக மதிப்பீட்டை இறுதி செய்து அளிக்க முடியாமல் உள்ளதாக மின் வாரியத்தினர் கூறுகின்றனர். மின் வாரியத்திடமிருந்து மதிப்பீடு கிடைத்தவுடன் இந்த சாலைப் பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலை துறை தயாராக உள்ளது.
17.5 மீட்டர் அகலத்தில் நடுவே 2.5 மீ மீடியன் உடன் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் விமான நிலையம் செல்வோர் மட்டுமின்றி தூத்துக்குடி நான்கு வழிச் சாலைக்கு செல்லும் பயணிகளும், அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
- ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன், பற்றாளர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் பாண்டி திட்டங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.
இதே போல் விக்கிர மங்கலம் ஊராட்சியில் செக்கான்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்விசெல்வம், பற்றாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.
வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முனி யராஜ் அறிக்கை வாசித்தார்.
மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி, வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார்.
திருவாலவாயநல்லூர் ஊராட்சியில்தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார்.
இதே போல் முள்ளி பள்ளம், சி.புதூர், சித்தாலங்குடி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், குருவித்துறை மற்றும் செல்லம்பட்டி ஒன்றியத்தில் சக்கரப்ப நாயக்கனூர், எரவார்பட்டி, பானாமூப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
- தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
- எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.
மதுரை
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிக மாக மாற்றம் செய்யப்படுகிறது.
இன்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆகிய நேரங்களில் மட்டுமே கீழ மாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் ஆகிய சாலைகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப் படும்.
9-ந் தேதி அன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.
மேலும் பை-பாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் சாலை, மூன்றுமாவடி சந்திப்பு, புது நத்தம் ரோடு, அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, கூடல் நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை-ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருந்துவமணை சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் இருந்து நகருக்குள் நுழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் 10-ந்தேதி. காலை 7.10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படும்.
10, 11-ந் தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக் குள் மேற்படி சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.
அதே நாட்களில் பொது மக்களின் நலன் சுருதி நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இருசக்கர வாகனங் கள் தவிர மற்ற வாகனங்க ளுக்கு அனுமதி இல்லை. அவசியமெனில் இரு சக்கர வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
அதே நாட்களில் பேலஸ் ரோடு, கீடிமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.
மதுரை மாநகர பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், வர்த்தக சங்கங்கள் நெரிசல் இல்லாமல் மக்கள் பொருட்கள் வாங்கி செல்ல உதவும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படு கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜவுளி கடையில் வாடிக்கையாளரிடம் திருடப்பட்டது.
- தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மதுரை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருடுவது அதிகரித்துள்ளது.
மதுரை அனுப்பானடி டீச்சர் காலனி தியாகராஜர் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (33). இவர் சம்பவத்தன்று புத்தாடை வாங்க தெற்குமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சென்றிருந்தார். அங்கு கூட்டம் அலைமோதியது. அதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் தேன்மொழி வைத்திருந்த பர்சை திருடி சென்றனர். அதில் ரூ.1000 ரொக்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகள் இருந்தன.
இதுகுறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் தேன்மொ ழியிடம் திருடியது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் அவர்கள் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரத்தை சேர்ந்த சுமதி (35), கோயம்புத்தூர் மதுக்கரையை சேர்ந்த லெட்சுமி (30) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
- திவாகரன், மாரிமுத்து, விஜய், சோலைசாமி, சக்தி முகேஷ், கார்த்திக் ராஜா என தெரிய வந்தது.
மதுரை
திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது வெயில் உகந்த அம்மன் கோவில் பின்புறம் பதுங்கியிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது.
உடனே போலீசார் விரட்டி சென்று 6 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது கத்தி, அரிவாள், மிளகாய்பொடி உள்ளிட்டவை வைத்தி ருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் மகன் திவாகரன், பரத் என்ற மாரிமுத்து, விஜய் (28), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சோலைசாமி (19), பந்தல்குடி நிறைகுளத்தான் மகன் சக்தி முகேஷ் (21), கார்த்திக் ராஜா (25) என தெரிய வந்தது.
6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தனியாக செல்லும் நபர்களை மிரட்டி இந்த கும்பல் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல் விளாச்சேரி சுடுகாட்டு பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி யிருந்த சிவபிரியன், மதன், கார்த்திக், பாலாஜி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரை திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர்.
- கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை தடுக்க ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும்.
சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து இருக்கும்.
இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கும்பல்கள் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.
இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்த அச்சமடைந் துள்ளனர். நெடுஞ்சாலை களில் குற்றங்களை தடுக்கவும், விபத்தின் போது துரிதமாக செயல்ப டவும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் போலீசாரின் மெத்தனம் காரணமாக சமூக விரோத கும்பல்கள் லாரி டிரைவர், தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.
லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது21). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு லாரியை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே உள்ள கருவேலம்பட்டி பிரிவு பகுதிக்கு சென்ற போது அங்கு 2 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த ராஜேஷ் உடனே லாரியை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேசை மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதே போல் கவாஸ்கர் என்பவரிடம் வழிப்பறி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த சாலை பணியாளர் பரிதாப இறந்தார்.
- பொக்லைன் வாகனம் ஏறியதில் உடல் நசுங்கியது.
திருமங்கலம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது53). சாலை பணியாளரான இவர் வெவ்வெறு ஊர்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். மதுரை மாவட்டம் திருமங்க லம்-ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் பால்பாண்டி வேலை பார்த்து வந்தார்.
திருமங்கலம் அருகே ராஜபாளையம் பிரிவுப் பகுதியில் நேற்று இரவு வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
அங்கு பணியில் இருந்த பால்பாண்டி அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதனை யாரும் கவனிக்கவில்லை. அப்போது அங்கு வந்த பொக்லைன் எந்திரம் பள்ளத்தில் ஏறி இறங்கியது. இதில் பால்பாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்னை பாத்திமா கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
ஆண்டுதோறும் அக்டோ பர் 30-ந்தேதி முதல் நவம் பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார மாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்க லம் ஆலம்பட்டியில் அமைந் துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் கல் லூரி தாளாளர் எம்.எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதல்படி நடை–பெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற் றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசு ஊழியர்களாக மாறும் வாய்ப் புள்ள மாணவ, மாணவிகள் லஞ்சம் வாங்கவும் மாட் டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற உறுதி மொழி ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆம்புரோஸ், ஜெயராஜ் மற்றும் சூர்யகலா ஆகியோர் கலந்துகொண்டு லஞ்சம் பெறுவதால் அர சின் திட்டங்கள் எவ்வா றெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும், குறிப் பிட்ட சில லஞ்ச வழக்கு விபரங்களை எடுத்துரைத்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு உரையாற்றினர்.
முன்னதாக வணிக மேலாண்மை துறை உதவிப் பேராசிரியர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடய அறிவி யல் துறை தலைவர் சீனிவா சன் தலைமையில் மாணவ-மாணவிகள் அஸ்வின், கார்த்திகேயன், ஜெனிடா, ஷோபனா, ராபியா, தாருன் னிஸா, ஸ்ரீ ஜெயலட்சுமி ஆகியோரும் அரங்க ஏற்பா டுகளை மனித வள மேலாளர் முகமதுபாசிலும் செய்திருந்தனர்.






