search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென் மாவட்டங்களுக்கு மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்

    • தென் மாவட்டங்களுக்கு மோசமான நிலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.

    மதுரை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு புறம் தொடங்கியிருக்க வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்க ளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்திருந்த நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் பட்டியலில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரைக்கு பல்வேறு ஊர்க ளில் இருந்தும், அண்டை மாவட்டங்களை சேர்ந்த வர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள்.

    இதற்காக அவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால் அரசு பேருந்துகளின் நிலைக்கு பயந்து தற்போது பயணத்தை ரத்து செய்யும் அளவுக்கு அச்சமடைந்துள்ளனர். காரணம் சற்றும் பராமரிப்பில்லாமல் அசாதாரண பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ள அரசு பஸ்களின் நிலை தான் என்று புகார் எழந்துள்ளது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு எந்த வித சிரமமும் இன்றி வெளியூர்களுக்கு பயணிக்கலாம் என்ன அரசு உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்துமே துளியும் பராமரிப்பு இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கூரை பெயர்ந்தும், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாமலும் பல பேருந்துகள் உள்ளதால் மழைக்காலங்களில் அதில் பயணம் செய்பவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. வழி நெடுகிலும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து மிக கனமழை பெய்தது. இதனால் பஸ்சின் மேற்கூரையிலிருந்து குழாயை திறந்தது போல் தண்ணீர் கொட்டிக் கொண்டே வந்தது. மேலும் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாததால் பேருந்துக்குள் மழை பெய்தது போன்று தண்ணீர் பாய்ந்தது.

    இதன் காரணமாக இருக்கைகள் இருந்தும் பயணிகள் அமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த குடையை விரித்தும் பஸ்சில் பயணம் செய்த னர். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாடை வாங்கிவிட்டு திரும்பிச் சென்ற பயணிகள் பேருந்துக்குள் கொட்டிய மழை நீரால் புத்தாடை நனைந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.

    சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை-தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்து இவ்வளவு மோசமான நிலையில் இருந்தால் பயணிகள் எப்படி பயணம் செய்வார்கள் என்பதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக் கொண்டனர்.

    இது பற்றி மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, இந்த பேருந்து இன்று இரவுடன் சேவையை நிறுத்திக் கொள்ளும் என்றும், பயணிகள் மாற்று பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன் இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.

    Next Story
    ×