என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
    • பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியில் சுனாமி குடியி ருப்பு உள்ளது. இந்த பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகளில் யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.

    கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று இந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    • அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் 26 பேரை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து உள்ளது. வெறிநாய் கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரியும் அந்தவெறி நாய் சிவப்புநிறம் உடைய தாகவும் வாயில் கருப்பு நிறம் உள்ளதாகவும் கழுத்து பகுதியில் நீல நிறம் உள்ள கயிறு அணியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

    • மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
    • நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் வசித்து வருபவர் முத்துப் பாண்டி (வயது 51).

    இவர் மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது மனைவி செல்வ குமாரி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் வசூலானது
    • தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் மாணவர்கள் 'பைக்' ரேசில் ஈடுபடுவதாக போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோணம் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகாடுகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய சோதனையில் ஹெல்ெமட் அணியாமல் வந்த பலரும் சிக்கினர். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களும் போலீசாரிடம் சிக்கி தவித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். கோணம் பகுதியில் மட்டும் மாலை நடந்த சோதனையில் 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் நகர் முழுவ தும் நேற்று ஒரே நாளில் 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட், லைசென்சு, போக்குவரத்து விதிமுறை மீறல் போன்ற காரணங்களுக்காக போலீசார் அபரா தம் விதித்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல் ஆகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே போக்கு வரத்து போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் காலை, மாலை நேரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.20 லட்சம் வசூலாகியுள்ளது.

    இதே போல் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசா ரும் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    • 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
    • கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.

    உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஜெய மலர்விழி (வயது 40).மாற்றுத்திறனாளி. இவர் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில் விற்பனையாளராக வேலையில் சேர கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நியமன ஆணைப் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார்.அங்கு கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை ஜெய மலர்விழி மீண்டும் அவர் மணவா ளக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றார்.அப்போதும் அவரை பணியில் சேர விடவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர் பெருமாள் ஆகியோர் விரைந்து சென்று கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தாசில்தாரிடம் அய்யப்பன் கூறியதாவது:- இங்கு 2 பணியிடங்களில் ஒருவர் பணியில் சேர்ந்து விட்டார்.15 வருடம் முன் இங்கு வேலை பார்த்து நீண்ட நாள் விடுப்பில் சென்ற மற்றொருவர் தற்போது வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார்.இதற்கு கூட்டுறவு சங்கம் சார்பில் அப்பீல் செய்ய வேண்டியுள்ளது.அதனால் கூட்டுறவு சங்க குழுவினர்களுடன் கலந்தாலோசித்துதான் முடிவு செய்ய முடியும் என்றார்.இதனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை முடிவில் மாலை 5.30 மணியளவில் ஜெய மலர்விழி பணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கம் முன் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
    • வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் ஆளூர் பேரூராட்சி தலைவராக இருந்த து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணிக்கு சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். லதா சந்திரன் பேரூராட்சி தலைவராக இருந்தபோது எந்த வகையான சொத்துக்களை வாங்கினார் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்களை சரி பார்த்தனர்.

    போலீசார் கேட்ட விவரங்களுக்கு அவர் பதில் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை தொடங்கிய சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லதா சந்திரன் ஏற்கனவே ஆளுர் பேரூர் அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். தற்போது வீராணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.

    • கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கொலை செய்யப்பட்ட பாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது‌.

    என்.ஜி.ஓ.காலனி:

    நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலமுருகன் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பாலன், குமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே பர்னிச்சர் கடையில் இடலாக்குடி நெடுந்தெருவை சேர்ந்த கணேஷ் (39) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து இரவு பர்னிச்சர் கடையில் தங்குவது வழக்கம்.

    நேற்று இரவு பாலன், கணேஷ் இருவரும் பர்னிச்சர் கடையில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்தினர். கணேசின் நண்பர் பட்டாரியர் நெடுந்தெருவை சேர்ந்த ஜெகதீசனும் அங்கு வந்தார். 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது பர்னிச்சர் கடையில் வேலை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. பாலன் தான் அதிக வேலை செய்வதாகவும் கணேஷ் சோம்பேறியாக உள்ளதாகவும் கூறினார்.

    இது கணேசுக்கும் அவரது நண்பர் ஜெகதீசுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலன் திடீரென ஜெகதீசை சரமாரியாக தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் ஜெகதீஷ் சேர்ந்து பாலனை கம்பால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலனையும் படுகாயத்துடன் நின்று கொண்டிருந்த ஜெகதீசையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஜெகதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் ஜெகதீஷ், கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    பாலன் கொலை செய்யப்பட்ட தகவல் தச்சநல்லூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். குடிபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.
    • நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார்.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திற்கு வந்து கர்ப்பிணி பெண்ணை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக சேர்த்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.

    நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார். டிரைவரை அவதூறாக வசை பாடினார்.

    இதை பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதற்கிடையில் ஆம்புலன்சில் இருந்த செவிலியர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரித்தபோது அந்த நபர் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திலும் வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை ஈடுபட்டார். தற்பொழுது 108 ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    • பிளஸ்சியா, கண்ணன் இருவரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • பிளஸ்சியாவின் தந்தை தனக்கும், தனது மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து கண்ணீர் மல்க சென்றார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). ஐ.டி.ஐ. படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பிளஸ்சியா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்தனர். இப்போது காதல் விவகாரம் பிளஸ்சியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கண்டித்தனர். ஆனால் அவர் கண்ணனுடன் தொடர்ந்து பழகி வந்தார்.

    இதனால் பிளஸ்சியாவை ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கொண்டு விட்டனர். அதன் பிறகும் அவர் கண்ணனுடன் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிளஸ்சியா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கண்ணன் பிளஸ்சியாவை கடத்தி சென்றதாக கூறியிருந்தார்.

    இந்த நிலையில் பிளஸ்சியா, கண்ணன் இருவரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தாங்கள் இருவரும் ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாகவும், இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து பிளஸ்சியா மற்றும் கண்ணனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருவரது பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிளஸ்சியாவை அவரது தந்தை தங்களுடன் வருமாறு அழைத்தார். ஒரு மணி நேரமாக போலீஸ் நிலையத்தில் பாசப்போராட்டம் நடந்தது.

    ஆனால் பிளஸ்சியா, கண்ணனுடன் தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் ஒரு மணி நேரமாக நடந்த பாச போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து பிளஸ்சியாவின் தந்தை தனக்கும், தனது மகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே அவர் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுக்குமாறு கூறினார். உடனே பிளஸ்சியா தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து பிளஸ்சியாவின் தந்தை தனக்கும், தனது மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து கண்ணீர் மல்க சென்றார். போலீசார் கண்ணனையும், பிளஸ்சியாவையும் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    • பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அழைத்துச் சென்ற பிரகாஷ், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28).

    இவர் அழகிய மண்டபத்தில் உள்ள ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இதற்காக தினமும் பஸ்சில் சென்று வந்தார். அந்த பஸ்சில் அவரது ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரும் சென்று வந்தார். அவர், பேச்சிபாறை அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அவருடன் பிரகாஷ் பேச்சு கொடுத்துள்ளார்.

    அப்போது மாணவியிடம், சுற்றுலா தலங்களை சுற்றி காட்டுகிறேன் என்று அவர் கூறி உள்ளார். இதனை நம்பிய மாணவி, பிரகாசுடன் சென்றுள்ளார். திற்பரப்பு, கன்னியாகுமரி, பத்மநாபபுரம், முட்டம் என பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அழைத்துச் சென்ற பிரகாஷ், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்து போன மாணவி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பிரகாஷ், அவரை ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை அழுதபடி தெரிவித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடையில் இருந்த பலகாரங்கள், மிட்டாய் பாட்டில்களை தூக்கி வீசி சூறையாடி உள்ளார்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் நிக்சன். இவர் இறந்து விட்ட நிலையில் மனைவி அம்பிகா அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை அவர் கடையில் தனியாக இருந்தார். அப்போது அங்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் விபிஷ் மது போதையில் வந்துள்ளார். அவர் கடைக்குள் நுழைந்து, அம்பிகாவிடம் அத்துமீறி நடந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் கடையில் இருந்த பலகாரங்கள், மிட்டாய் பாட்டில்களை தூக்கி வீசி சூறையாடி உள்ளார்.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் அம்பிகா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபிஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் வாலிபர் பாட்டில்களை சாலையில் வீசி உடைப்பது, போதையில் ஒருவரை தாக்கும் காட்சிகள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×