என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே டீ கடை சூறை - பெண் மீது தாக்குதல்
- கடையில் இருந்த பலகாரங்கள், மிட்டாய் பாட்டில்களை தூக்கி வீசி சூறையாடி உள்ளார்.
- வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் நிக்சன். இவர் இறந்து விட்ட நிலையில் மனைவி அம்பிகா அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை அவர் கடையில் தனியாக இருந்தார். அப்போது அங்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் விபிஷ் மது போதையில் வந்துள்ளார். அவர் கடைக்குள் நுழைந்து, அம்பிகாவிடம் அத்துமீறி நடந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் கடையில் இருந்த பலகாரங்கள், மிட்டாய் பாட்டில்களை தூக்கி வீசி சூறையாடி உள்ளார்.
இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் அம்பிகா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபிஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வாலிபர் பாட்டில்களை சாலையில் வீசி உடைப்பது, போதையில் ஒருவரை தாக்கும் காட்சிகள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






