என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தென் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52). பெயிண்டர். இவருக்கு ஆகாஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் சின்னசேலத்திற்கு பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு தினமும் சென்று வருவார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை தென் பொன்பரப்பி கிராமத்தில் இருந்து சின்ன சேலத்திற்கு இரு சக்கர வாகனத்தில் ராஜேந்திரன் சென்றார்.அவர் அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    பின்னர் அருகில் இருந்த வர்கள் ராஜேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ன சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப் பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இது குறித்து ராஜேந்திர னின் மகன் ஆகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்.

    • மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்க டேஸ்வரன். வெளிநாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அனிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    இதற்கிடையே அனிஷா வின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூல மாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 7 வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் அனிஷா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கொள்ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு விசாரணை செய்து வருகிறார்.

    • மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பபில் அவர் கூறியிறுப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி கள் 2022-2023 மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பொதுபிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 1500 மீ (பெ), 3000 மீ), குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.

    12 முதல் 19 வயது வரை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம் (100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 110மீ மற்றும் 100மீ) தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல்கையுந்துபந்து, மேசைப்பந்து, போட்டிகளும், மாற்றுதி றனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீ ஓட்டம், இறகுபந்து-5நபர், பார்வை த்திறன் மாற்று த்திறனாளி 100மீ ஓட்டம், 7 நபர் மனவளர்ச்சி குன்றியோர் 100 மீ ஓட்டம், எறிபந்து- 7 நபர், செவித்திறன், மாற்றுத்தி றனாளி 100 மீ ஓட்டம், கபடி-7நபர் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, தடகளம் 100மீ, 1500மீ, 3000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3,000, 2-ம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000, மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்துபந்து, முதல் பரிசு ரூ.36,000 2-ம் பரிசு ரூ.24,000 3-ம் பரிசு ரூ.12,000 மற்றும் கால்பந்து, ஹாக்கி முதல் பரிசு ரூ.54,000, 2-ம் பரிசு ரூ.36,000, 3-ம் பரிசு ரூ.18,000, வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்ப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்- 99435 09394, 86757 73551, 74017 03485, ல் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிதந்து கொள்ளலாம். இந்த விளையாட்டு போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வீரர், வீராங்க னைகளும் பெரும் அளவில் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையிலிருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கனரக லாரி ஒன்று மாலை புறப்பட்டது. தென்காசி மாவட்டம் நன்னகரம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று நளளிரவு உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் நாராயணமூர்த்தி உடல் நசுங்கி உயிரழந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த எடக்கல் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தை உடனடியாக வரவழைத்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறந்து ஒரு மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் விபத்து நடந்து, லாரி டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சதீஷ்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறச்சி:

    ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது27). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், கருணாநிதி, விஜயகுமார், குமார் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்தது.
    • லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேர்ந்த நாடு அருகே உள்ள கள்ள மேடு பகுதியில் இருந்து அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் அருள்முருகன் சம்பவ இடத்திற்கு சென்றார். மேப்புலியூர் என்ற இடத்தில் லாரியை அவர் மடக்கி பிடித்தார். லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். லாரியை அங்கிருந்து எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
    • 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த பெரியப்பட்டுபகுதியைச் சேர்ந்த அன்பரசன் (வயது 36). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கு பாணுப்பிரியா (29) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். பின்னர் 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இவரது மனைவி பாணுப்பிரியா நெல் அறுவடை இயந்திர உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் வேலைக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாணுப்பிரியா திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்
    • கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    உளுந்தூர்பேட்டை அருகே கிரிமேடு கிராமத்தில் வசிப்பவர் சந்திரலேகா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப டுத்தியதால் அவருடன் வாழாமல் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014-ல் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்தார். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி வெங்கடேஷ்குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தி ரலேகாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்திய கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து கோ பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
    • நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு விவசாயி. இவரது மனைவி சித்ரா(53). இவர்களுக்கு பரசுராமன், கிருஷ்ணராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் சென்னையில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, மகன்களை பார்க்க சென்னைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று மதியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.

    இதுபற்றி சின்ராசு வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கணவன்-மனைவி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு ஊரக வாழ் வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவி லான கூட்ட மைப்பு களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திருச்சியில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா வில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்க ளுக்கு வங்கி கடன் ரூ.12.20 கோடி மதிப்பீட்டிலும், 87 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.82.06 கோடி மதிப்பீட்டில் என 416 மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு ரூ.94.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணண், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் புவனேஸ்வரி பெருமாள், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கக திட்ட இயக்கு னர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, இந்தி யன் வங்கி துணை பொது மேலாளர் (கடலூர்) கவுரி சங்கர்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    • இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.
    • இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி சின்னபொண்ணு. இவருடைய கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.

    இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாா் விசாரணை செய்து வருகின்றனர்.

    • எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களமருதூர் பகுதி ஒரத்தூர் காலனி சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசார் பார்த்தவுடன் அவர் ஓடத் தொடங்கினார். ஆனால், போலீசார் அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுபோல் தொடர்ந்து சம்பவங்களை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்.பி. மகேஷ் எச்சரித்துள்ளார்.

    ×