என் மலர்
கள்ளக்குறிச்சி
- ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார்.
- தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப் பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது62) விவ சாயி. இவர் தனது விவசாய நிலம் அருகில் உள்ள ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் அவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்குள் இறங்கி கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார்.
- உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வேன் ஒன்று சென்றது. அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார். அப்போது விருத்தாச்சலம் மேம்பாலம் அருகே வந்தபோது வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வேனை ஓட்டிவந்த டிரைவர் ரகுமான் உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூ ர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யிலான போலீ சார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.
- இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.
- கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மேட்டத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாடம் படிக்கவில்லை என்று ராஜேஸ்வரியை திட்டி உள்ளனர். இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரி குதித்து தற்கொலை செய்தார். அப்போது வயல்வெ ளிக்குச் சென்றவர்கள் கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் ராஜேஸ்வரி என தெரியவந்தது. திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன்மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை அவரை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- திருநாவலூர் அருகே மதுபோதை கணவனால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி விசாரணை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் விவசாயி இவரது மனைவி ஆரோக்கிய மேரி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அற்பு தராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சல் இருந்த ஆரோக்கியமேரி வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்கியமேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழு ப்புரம் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெற்ற இந்த சந்தைக்கு ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வார சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.
ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது சந்தை தொடங்கி 2 மணி நேரத்திலேயே ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார்.
- ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கள்ளக்குறிச்சி:
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை பகுதியை சேர்ந்தவர் ெஜயகணேசன் (வயது 39) கார் டிரைவர். சம்பவத்தன்று காரில் சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார். அப்போது எறைஞ்சி சாலை அருகே காரை நிறுத்தி காருக்குள் தூங்கியுள்ளார். இதனையடுத்து ஜெய கணேசின் உறவினர்கள் போன் மூலம் இவரை தொடர்பு கொண்டபோது இவர் போனை எடுக்க வில்லை. இதனால் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர்.
தகவலின்பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து போலீசார் ஜெயகணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கணேஷ் எப்படி இறந்தார் ? யாரேனும் கொலை செய்தனரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை
- போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.
- வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது27) என்பவர் மூக்கனூர் ஏரிக்கரை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- தியாகதுருகம் அருகே பெங்களூர் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாஷை தேடி வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகம்துருகம் அருகே சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பிரகாஷ் (வயது 25). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (25) என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது ராஜேஸ்வரி கெம்பை கவுடா போலீஸ் நிலையத்தில் கணவர் தன்னை கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெங்க ளூர், கெம்பை கவுடா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் குரானா தலை மையிலான 3 போலீசார் நவீன் பிரகாஷை தேடி சித்தால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற னர். அப்போது வீட்டில் இருந்த நவீன் பிரகாஷின் தாய் தையல்நாயகி (43), தங்கை பிரியா (24), தாத்தா அண்ணாமலை (76) ஆகியோர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கியதாகவும், மேலும் போலீசார் வந்த வாடகை கார் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயம் அடைந்த போலீசார் சித்தன்ன கவுடா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போலீசார் சித்தன்ன கவுடா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தையல்நாயகி, பிரியா, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாரியை ஓட்டி வந்த ரகோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் திருமாள் தலைமையில் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 16 டன் ரேஷன் அரிசி 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மேற்கு தெருவை சேர்ந்த ரகோத்தமன் (வயது 27) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை.
- சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹாஜிம்பாஷா மகன் யாகூப் (வயது 13) அரசு பளளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். முகமது அலி மகன் அமீர் அலி (13), ரபீக் மகன் கையீப் (13). இவர்கள் 2 பேரும் தியாகதுருகம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை. பள்ளி முடித்து மசூதிக்கு சென்ற தொழுதுவிட்டு வீட்டிற்கு வருவார்கள் என்று காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மாணவர்கள் படிக்கும் பள்ளி, அருகி லுள்ள மசூதிகள் என எங்கு தேடியும் 3 மாணவர்க ளையும் காண வில்லை. இதுகுறித்து 3 மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், களமருதூர் கிராமத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தினர். அதன்படி அப்பகுதி பஸ் நிறுத்துமிடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 மாணவர்களும் உளுந்தூர்பேட்டை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது. இந்த மாணவர்களுடன் பயிலும் மாணவர்களிடம் விசாரித்த போது, 3 பேரும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி கொண்டிருந்தது போலீ சாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து 3 மாண வர்களின் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் சென்னையில் உள்ள அவர்களின் உறவி னர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். மாணவர்கள் அங்கு வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க அறிவுறுத்தினர். மேலும், இத்தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் இந்த 3 மாணவர்களும் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ளதாக ஒரு மாணவனின் உறவினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சென்னை ராயபுரம் சென்ற திருநாவலூர் போலீசார் 3 மாணவர்களையும் மீட்டனர். சென்னையில் மீட்க ப்பட்ட மாணவ ர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், துணை சுப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் மற்றும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன மாணவர்கள் 3 பேரை திருநாவலூர் போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டது போலீசாருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
- போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது23) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- செந்தில்ராஜா பெங்களூருவில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- சில நிமிடங்களில் காா் என்ஜீன் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது42). பெங்களூருவில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை ராமமூர்த்தி இறந்து விட்ட நிலையில், 8-வது நாள் துக்க நிகழ்ச்சிக்காக செந்தில்ராஜா குடும்பத்துடன் காரில் மேலப்பழங்கூருக்கு வந்து கொண்டிருந்தார்.
நூரோலை கிராமம் வழியாக வந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் காா் என்ஜீன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்ராஜா உடனடியாக காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கி ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை காரின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் தீயில் சேதம் அடைந்த காரை பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






