என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The engine catches fire"

    • செந்தில்ராஜா பெங்களூருவில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • சில நிமிடங்களில் காா் என்ஜீன் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது42). பெங்களூருவில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை ராமமூர்த்தி இறந்து விட்ட நிலையில், 8-வது நாள் துக்க நிகழ்ச்சிக்காக செந்தில்ராஜா குடும்பத்துடன் காரில் மேலப்பழங்கூருக்கு வந்து கொண்டிருந்தார். 

    நூரோலை கிராமம் வழியாக வந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் காா் என்ஜீன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்ராஜா உடனடியாக காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கி ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை காரின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் தீயில் சேதம் அடைந்த காரை பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×