என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன 3 மாணவர்கள் சென்னையில் மீட்பு:திருநாவலூர் போலீசார் அதிரடி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன 3 மாணவர்கள் சென்னையில் மீட்பு:திருநாவலூர் போலீசார் அதிரடி

    • பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை.
    • சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹாஜிம்பாஷா மகன் யாகூப் (வயது 13) அரசு பளளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். முகமது அலி மகன் அமீர் அலி (13), ரபீக் மகன் கையீப் (13). இவர்கள் 2 பேரும் தியாகதுருகம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை. பள்ளி முடித்து மசூதிக்கு சென்ற தொழுதுவிட்டு வீட்டிற்கு வருவார்கள் என்று காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மாணவர்கள் படிக்கும் பள்ளி, அருகி லுள்ள மசூதிகள் என எங்கு தேடியும் 3 மாணவர்க ளையும் காண வில்லை. இதுகுறித்து 3 மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், களமருதூர் கிராமத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தினர். அதன்படி அப்பகுதி பஸ் நிறுத்துமிடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 மாணவர்களும் உளுந்தூர்பேட்டை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது. இந்த மாணவர்களுடன் பயிலும் மாணவர்களிடம் விசாரித்த போது, 3 பேரும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி கொண்டிருந்தது போலீ சாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 3 மாண வர்களின் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் சென்னையில் உள்ள அவர்களின் உறவி னர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். மாணவர்கள் அங்கு வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க அறிவுறுத்தினர். மேலும், இத்தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் இந்த 3 மாணவர்களும் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ளதாக ஒரு மாணவனின் உறவினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சென்னை ராயபுரம் சென்ற திருநாவலூர் போலீசார் 3 மாணவர்களையும் மீட்டனர். சென்னையில் மீட்க ப்பட்ட மாணவ ர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், துணை சுப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் மற்றும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன மாணவர்கள் 3 பேரை திருநாவலூர் போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டது போலீசாருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    Next Story
    ×