என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • விண்ணப்பங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி கூறியிரு ப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களை தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலமாக மாதம் 18 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்திடும் வகையில் விண்ணப்ப ங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.

    மேலும் இப்பணியி டத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படி வங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி-606 213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள போலீஸ் குடியி ருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவுஇவர் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளார். அதன் பெயரில் அவர் குடும்பத்தி னர் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடி யாக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார். இவரது சொந்த ஊர் வானூர் அருகே புதுப்பாளையம் கிராம மாகும். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர்.
    • நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீ சார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் மனைவி நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) ஆகியோருடன் கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார்.
    • தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது  கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார். மாவட்ட இணை செய லாளர் அண்ணாமலை, மாவட்ட துணை செய லாளர் பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வர வேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கிருஷ்ண சாமி, மாநில செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியம் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 10- ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர். அப்போது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகி கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள், தூய்மை பணியா ளர்கள், தூய்மை காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

    • ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார்.
    • தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப் பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது62) விவ சாயி. இவர் தனது விவசாய நிலம் அருகில் உள்ள ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் அவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்குள் இறங்கி கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார்.
    • உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வேன் ஒன்று சென்றது. அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார். அப்போது விருத்தாச்சலம் மேம்பாலம் அருகே வந்தபோது வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வேனை ஓட்டிவந்த டிரைவர் ரகுமான் உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூ ர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யிலான போலீ சார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    • இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.
    • கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மேட்டத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாடம் படிக்கவில்லை என்று ராஜேஸ்வரியை திட்டி உள்ளனர். இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரி குதித்து தற்கொலை செய்தார். அப்போது வயல்வெ ளிக்குச் சென்றவர்கள் கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் ராஜேஸ்வரி என தெரியவந்தது. திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன்மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை அவரை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • திருநாவலூர் அருகே மதுபோதை கணவனால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி விசாரணை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் விவசாயி இவரது மனைவி ஆரோக்கிய மேரி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அற்பு தராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சல் இருந்த ஆரோக்கியமேரி வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்கியமேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழு ப்புரம் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று நடைபெற்ற இந்த சந்தைக்கு ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வார சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது சந்தை தொடங்கி 2 மணி நேரத்திலேயே ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார்.
    • ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை பகுதியை சேர்ந்தவர் ெஜயகணேசன் (வயது 39) கார் டிரைவர். சம்பவத்தன்று காரில் சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார். அப்போது எறைஞ்சி சாலை அருகே காரை நிறுத்தி காருக்குள் தூங்கியுள்ளார். இதனையடுத்து ஜெய கணேசின் உறவினர்கள் போன் மூலம் இவரை தொடர்பு கொண்டபோது இவர் போனை எடுக்க வில்லை. இதனால் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர்.

    தகவலின்பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து போலீசார் ஜெயகணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கணேஷ் எப்படி இறந்தார் ? யாரேனும் கொலை செய்தனரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை

    • போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.
    • வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது27) என்பவர் மூக்கனூர் ஏரிக்கரை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×