search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of lorry"

    • வைரம் குட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருவதாக, தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமாருக்கு புகார் சென்றது.
    • விஏஓ கலியபெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வைரம்குட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    சேலம்:

    வீரகனூர் அருகே புளியங்குறிச்சி ஊராட்சி, வைரம் குட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருவதாக, தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமாருக்கு புகார் சென்றது. அதன்பேரில், விஏஓ கலியபெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வைரம்குட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொக்லைன் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளுவது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலின் பேரில், விரகனூர் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார், ஆர்ஐ ஜெயா விசாரணை நடத்தியதில், மணல் அள்ளி யது புளியங்குறிச்சியைச் சேர்ந்த செந்தில் (வயது 35) என்பவரது பொக்லைன் மற்றும் லாரி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

    • கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) ஆகியோருடன் கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×