என் மலர்
நீங்கள் தேடியது "blacking without permission"
- கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) ஆகியோருடன் கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






