என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
    • எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டு அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு மகள் டெனிஷா நாயகி (வயது 18). இவர் மூளை வளர்ச்சி இல்லாமல் மனநலம் குன்றிய நிலையில் இருந்தார். இந்த நிலையில் டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.

    அப்போ து டெனிஷா நாயகி சாலை யோரம் கிடந்த தீப்பெட்டி யை எடுத்து பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன
    • இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி நிரோஷா (வயது 33). இவரும், இவரது கணவரும் 2 கறவை மாடுகள் வைத்து, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே ஊரை சோ்ந்த பிச்சன் மகன் சாமிகண்ணு என்பவரின் விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

    இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்தம் சொட்ட... சொட்ட... வலி தாங்க முடியாமல் மாடுகள் அலறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரோஷா, சாமிகண்ணுவிடம் தட்டிக் கேட்டபோது அவர் ஆபாசமாக திட்டி கொடுவாளை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து நிரோஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42) இவர் விஜய் ரசிகர் மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே விஜய் ரசிகர் மன்ற பேனர் வைத்துள்ளனர்    இந்த பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மாயவன் தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதில் படுகாயம் அடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர்.
    • லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதியது.
    • பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவரின் மனைவி பூங்காவனம் (வயது 70). இவர் நேற்று மாலை மடப்பட்டு பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்தே வீடு திரும்புகிறார். அப்போது இரவு 7 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதிவிடுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விடுகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த மடப்பட்டு ஐயனார் கோவில் அருகில் விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இதில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. டிரைவரை கைது செய்த போலீசார் வேனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி பொங்கல் பண்டி கையை யொட்டி போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பண்டி கை நாட்களில் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், 6 மதுவிலக்கு சிறப்பு போலீசார் தனிப்படை அமைத்தும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமை யில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நைனார்பாளையம் டாஸ்மாக் கடை எதிரே செம்பாக் குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்த மணி கண்டன் (வயது 25). என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார். 

    அவரிடமிருந்து சுமார் 1032 அரசு மதுபான பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட வினை தீர்த்தா புரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிட மிருந்து 70 அரசு மதுபான பாட்டில்கள் கைப்பற்ற பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் அதிகாலை முதல் தீவிர மதுவிலக்கு சோத னையில் ஈடுபட்டு வரும் நிலையில், கரியா லூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட அரண்மனை புதூர் தெற்கு ஓடையில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 200 லிட்டர் பிடிக்ககூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த 600 லிட்டர் கள்ளச்சாரய ஊரலை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே அழித்தனர். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், 1679 மதுபான பாட்டில்க ளும், 600 லிட்டர் கள்ளச்சா ராய ஊரலும் கைப்பற்றப் பட்டுள்ளது.

    • கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் வட்டம் மூங்கில்து றைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு பகுதி யைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி சஞ்சீவி (வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொ ன்பரப்பி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம், தனது மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் மருமகன் ராமகிருஷ்ணன், அவரது தந்தை ராமசாமி, தாய் ஜெயக்கொடி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் ெசய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சஞ்சீவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    • லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
    • கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ஒன்றியத்தில் பால் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் பணிகளை ஆய்வு செய்து, ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினார். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய அலுவலகம் அமைத்தல், புதிய ஆவின் பாலகங்கள் அமைத்தல், பணிகள் தொடர்பாக அறிவு ரைகளை வழங்கினார்.பால் பெருக்கு மற்றும் பால் உப பொருட்கள் தயாரிக்கவும் ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சின்னசே லம் தாசில்தார் இந்திரா ,சின்னசேலம் யூனியன் துணை தலைவர் அன்புமணிமாறன்,, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம்,ஒன்றிய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொது மேலாளர் ஈஸ்வர் மற்றும் இயக்குனர்கள் ஆவின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.,

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் மணலூர் பேட்டை - ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது  இந்நிலையில் தியாக துருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகு தியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை  இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

      போக்குவரத்துகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
    • தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    சின்னசேலம், ஜன. 14-

    கள்ளக்குறிச்சி வி.ஓ.சி.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் கள்ளக்குறிச்சியில் உள்ள லேத்து பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அக்ராய பாளையத்தில் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 அக்கரா பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் முத்தையா மில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது புதுப்பல்லக் கச்சேரி ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் நோக்கி வந்து வந்தவர் எதிர்பாராத விதமாக சாகுல் ஹமீத் சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிப ட்டார் பின்னர் அடிபட்டு கீழே கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
    • தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது42), மூரார்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (50), விரியூரை சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 3 பேரும் தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ×