search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே   இரவில் சுற்றி திரியும் மர்ம விலங்கு- பொது மக்கள் அச்சம்
    X

    சின்னசேலம் அருகேஇரவில் சுற்றி திரியும் மர்ம விலங்கு,

    சின்னசேலம் அருகே இரவில் சுற்றி திரியும் மர்ம விலங்கு- பொது மக்கள் அச்சம்

    • கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது. மர்மவிலங்கு கடித்த இவரது நாய் இறந்துகிடந்தது,
    • மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வந்தனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரனூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது இதனை தொடர்ந்து விளை நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அ தன்படி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமே ஷ்சோமன், கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜி, வனவர் சின்னதுரை ஆகியோர் காரனுாரில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வயல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

    . அங்கு விளைநிலத்தில் பதிந்திருந்த மர்மவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர் மேலும் மர்ம விலங்கின் எச்சத்தை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதாகவும், இரவு நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர் இதேபோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மர்ம விலங்கு சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கால்நடைகளை பாதுகா ப்பாக வைத்து கொள்ளவும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வயல் பகுதிகளில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த விலங்கு செந்நாய், சிறுத்தை, கரடி, காட்டுப் பூனை ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×