உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி விவசாயி பலி

உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி விவசாயி பலியானார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை அருகே  வேன் மோதி விவசாயி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது49) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது திருவெண்ணைநல்லூர் ரோடு பாண்டூர் காலனி மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திருக்கோவிலூரில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற வேன் அய்யனார் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெ க்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com