என் மலர்
கள்ளக்குறிச்சி
- 90-க்கும் மேற்பட்டோர் 2 பஸ்சில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
- 2 பஸ்களில் வந்த சுமார் 18 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளை யத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 90-க்கும் மேற்பட்டோர் 2 பஸ்சில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தியாகதுருகம் அருகே ரீட்டா நகர் பகுதி யில் சென்ற போது, முன்னால் சென்ற பஸ் வேகத்த டையை கடந்த போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 2 பஸ்களில் வந்த சுமார் 18 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தி னர் மீட்டு கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
- மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
- சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செல்வம் (வயது57) என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி செல்வம், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
- 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். மேலும் சமாதான வெண் புறாக்க ளையும், மூவர்ன நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டார்,
மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காவல்து றையினர் ஆயுதப்படை ஆய்வாளர் இளையராஜா தலைமையிலும், முதல் படைக்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் முத்துசாமி, இரண்டாம் படைக்கு உதவி ஆய்வாளர் கீர்த்தனா, தீயணைப்புத்துறை யினர் நிலைய தலைமை அலுவலர் ராமச்சந்திரன், வனத்துறையினர் வனவன் முருகன், ஊர் காவல் படையினர் ஜான ரத்தினம், தேசிய மாணவர் படையினர் ரஞ்சித், ஜூனியர் பிரிவு கவிராஜ் ஆகியோர் தலைமையிலும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 34 பேர், தீயணைப்பு மீட்புபணிகள் துறை 12- பேர், வருவாய்த்துறை 8 பேர், ஊரக வளர்ச்சி துறை 9 பேர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை 8 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 191 பேருக்கு நற்சான்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணி ஆற்றிய காவல்து றையினர் 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாசற்ற பணி நிறைவு செய்த ஈப்பு ஓட்டுநர்கள் 7 பேருக்கு 4 கிராம் தங்க பதக்கத்தை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, மருத்தவக்கல்லூரி மருத்து வமனை கண்காணிப்பாளர் நேரு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனா ளிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் வட்டார அளவில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய - கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற 28- ந்தேதி சனிக்கிழமை அன்று சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே வாய்ப்பை சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்டவர் என்பவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,
- வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி பகுதியை சேர்ந்த ஆண்டவர் (வயது 33) இவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 18-ந் தேதி ஆண்டவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆண்டவர் இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை தேடிப் பார்த்தனர்,
- எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்,
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே எரவார் கிராமத்தில் வசிக்கும் ராஜாமணி (வயது 55) இவரது கணவர் பெரியசாமி மகள் கோமதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கோமதி நேற்று அதிகாலையில் தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை உறவினர் வீடு, அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.
- ஆறுமுகம் மகன் மணிகண்டன். இவரது சின்ன மாமனார் வீட்டுக்கு சென்றார்.
- மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல்விடுத்தனர்,
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(வயது31). இவர் சம்பவத்தன்று பொங்கல் பண்டிகைக்காக கடுவனூரில் உள்ள தனது சின்ன மாமனார் சங்கர் வீட்டுக்கு சென்றார். அப்பொழுது வீட்டுமனை சம்மந்தமான முன் விரோதம் காரணமாக சங்கரிடம் கடுவனூரை சேர்ந்த அவரது அண்ணன் குப்பன் தனது ஆதரவாளர்களுடன் தகராறு செய்ததோடு இதை தடுக்க முயன்ற மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த குப்பன்(46), அமுதா, ரவி, அஜித்குமார்(27) ஆகிய 4 பேர் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குபதிவு செய்து குப்பன், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் குப்பன் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், மஞ்சுளா, முத்துராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியபாமா என்பவர் தனது மாமா ராமு என்பவரின் மகன் மணி (30) பொறியியல் பட்டதாரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
- சத்தியபாமா விடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சத்தியபாமா (வயது 22) பி.எஸ்.சி. படித்துவிட்டு சென்னையில் லேப் டெக்னீஷனாக பணிபுரிந்து வருகிறார் இவர் தியாகதுரும் அருகே வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனது மாமா ராமு என்பவரின் மகன் மணி (30) பொறியியல் பட்டதாரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தொலை பேசியிலும், தனிமையிலும் சந்தித்தும் பேசி வந்துள்ளனர்.
மேலும் ராமு அவ்வப்போது காரனூர் கிராமத்திற்கு சென்று தனிமையில் இருக்கும்போது சத்தியபாமா விடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியபாமா வின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் வேளானந்தல் கிராமத்தில் உள்ள மணி வீட்டிற்க்கு சென்று நிச்சயதார்த்தம் குறித்து பேசி உள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த மணி இவரின் தாய் சாந்தா (58), அக்காள்கள் தீபா (32), வெண்ணிலா ஆகியோர் இவர்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சத்தியபாமா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணி, சாந்தா, தீபா, வெண்ணிலா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
- மன உளைச்சலில் இருந்த முருகன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சேடன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 58) . இவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.இதனை அடுத்து முருகன் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
- வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 34 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தனபால் கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கார் நகர் பகுதியை பார்வையிடுவதற்காக வந்தார்
. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்போது அம்பேத்கார் நகரை பார்வையிட செல்ல வேண்டாம் என்று கூறினர் அப்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களு டைய கோரிக்கைகளை கேட்ப தற்காக மட்டுமே செல்கி றோம், எங்களை தடுக்க வேண்டாம் என்று கூறி அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர் இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு காவலர்கள் அனுமதி அளித்ததை தொடா்ந்து அவர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தனபால் கூறும்போது, வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது காட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- இவரது 19 வயது மகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார்.
- சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் . இவரது 19 வயது மகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இவரை கடந்த 18-ந் தேதி முதல் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து முனியன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர்.
- மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 64) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பொங்கல் விடுமுறை முடிந்து தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரில் வந்த கார் மோதியது. இதில் நீலமேகம், இவரது மனைவி சுதாலட்சுமி (48), விக்னேஷ் (35), இவரது மனைவி உமாமகேஸ்வரி (33), விக்னேஷ் மகள் சஹானா (6), எதிரே வந்த காரில் இருந்த விஸ்வா, இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (20) சின்னகள்ளி ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் கிருஷ்ணராஜ்(20), அரும்பட்டு சமத்துவபுரம் பழனி மகன் முபின்ராஜ் (21), குமாரசாமி மகன் ஆகாஷ் (20), விழுப்புரம் ஆஸ்பத்திரி சாலை ரவிசங்கர் மகன் பிரசாந்த் (22) மற்றும் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டி ருந்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் கோவிந்தன் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பிரசாந்த் என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் பலியான பிரசாந்த் விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






