என் மலர்
கள்ளக்குறிச்சி
- இவர் சாலையகை் கடக்கும்போது சென்னை நோக்கிச் சென்ற அசோக் லேலண்ட் தோஸ்த் வேன் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார்.
- அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது42) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு செல்லும்போது குணமங்கலம் பஸ் நிறுத்தம் என்ற இடத்தில் கடக்கும்போது கோவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அசோக் லேலண்ட் தோஸ்த் வேன் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார்
. அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப் இன்ஸ்பெக்டர அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய ப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கணவன்-மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சிங்காரத்தோப்பில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய ப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்கள் சிங்காரத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தர்மா என்கிற ஜான்பீட்டர் (38) மற்றும் அவரது மனைவி சகாயராணி (32) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
- சுப்பிரமணி.அவரது மகன் பாலு தொழிலாளியான இவர் மதுபோதையில் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலு இறந்தார்
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி.அவரது மகன் பாலு(வயது 29). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மதுபோதையில் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலு இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை? இது குறித்து பாலுவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்
- 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சா ராயம் காய்ச்சு பவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடு பவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படிகள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை யில் தனிப்படை காவலர்கள் கல்வராயன் மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது குரும்பா லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்தி ருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர்மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.
இதேபோல் கள்ளக் குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரனே ஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் ஆக மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர் மேலும் குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகி யுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்ற னர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சா ராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார் போலீஸ் சூப்பிரண்டு கல்வராயன் மலைப்பகு திக்கு நேரடியாக வந்து சாராய ஊரல்கலை அழித்த சம்பவம் அப்பகுதி போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குற்றவாளிகள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தனசேகரன் திருச்செங்கோட்டில் உள்ள தம்பியை பார்த்துவிட்டு மீண்டும் நெய்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.
- கொங்கு திருமண மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் மோதியது.
கள்ளக்குறிச்சி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செங்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் நித்திஷ் (வயது 19). இவர் டிப்ளமோ படித்துவிட்டு நெய்வேலியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தம்பியை பார்த்துவிட்டு மீண்டும் நெய்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். அப்போது அமையாபுரம் தாண்டி வந்து கொண்டிருந்த பொழுது சின்னசேலம் கொங்கு திருமண மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நித்திஷ் சின்னசேலம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
- காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புக்குளம் டாஸ்மாக் பின்புறம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (வயது 56), சேகர் (46) வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (41), காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (35), தியாகதுருகத்தைச் சேர்ந்த கமல்கான் (50) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
- பஸ்சினை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி வந்தார்.
- விபத்தில் 28-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
சென்னையில் இருந்து முப்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டி ருந்தது. பஸ்சினை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி வந்தார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து தனியார் பால் பண்ணை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றுக்கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அந்தோனிதாசன் (வயது 58), கன்னியக்குமரி விளவங்கோடு கமலாபாய் (64) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 28-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிர் இழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
கள்ளக்குறிச்சி, ஜன.28-
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செய்து கைது செய்தனர்.
- இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
- இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயகவுரி (வயது 60) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இவர் தினமும் சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று நடந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.
- போலீசார் மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
- அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்க்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் கொசப்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
- வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.






