என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,   உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது,
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    • 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது. இந்த மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின் மாற்றியை கீழே தள்ளியதில் அதிலிருந்த சுமார் 200 லிட்டர் ஆயில் கீழே கொட்டி வீணாகியது. தொடர்ந்து மின் மாற்றியை கழற்றி அதனுள் இருந்த சுமார் 625 கிலோ தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தியாகதுருகம் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகை யில், மர்ம நபர்கள் மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை திருடி சென்ற தால் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள மின் மாற்றிகளுக்கு விவசாயமின் இணைப்பை பிரித்து வழங்க நடவடிக்கை என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அனுமந்தல் கிராமம் ராமன் மகன் பிச்சப்பிள்ளை (வயது 44) இவர் நைனார்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்கு, கடை வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிலள இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் தோட்டப்பாடி கிராமம் சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் சோதனை மேற்கொண்ட போது குழந்தைசாமி என்பவருடைய மகன் விஜயன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சின்னசேலம் குமரன் நகர் பிச்சப்பிள்ளை என்பவருடைய மகன் பெரியசாமி (வயது 50) என்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த 10 லிட்டர் தென்னை மரத்துக் கள்ளினைபறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிய உணவு இடை வேளையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. துணை தலைவர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசால் அறிவிக்க ப்பட்ட அரசாணை எண் 207-ன் படி இளநிலை வருவாய் ஆய்வா ளராக பணிபுரிந்து வரும் சரவணனு க்கு பதவி உயர்வு வழங்க க்கோரி போராட்டம் நடை பெ ற்றது. இதில் கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    • சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது.
    • கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது. எனவே இந்த இறங்கு தளம் மூலம் சரக்கு ெரயிலில் இருந்து வரும் உரங்கள், யூரியா, அரிசி மூட்டை ஆகியவற்றை இறக்கி சேமிப்பு கிடங்களில் வைப்பது வழக்கம். அதேபோல் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது. டெல்டா மாவட்டங்களான நாகை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடை முன் கூட்டியே நடைபெற்று வருகிறது.

    இதனால் அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ரேசன் கடைகளுக்கு அரிசி வழங்குவதற்காக 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வாங்கி அதை சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றி வந்து லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதன் மூலம் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளனர்.

    • இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்
    • சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோட்டை அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (29). இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இரவு பகண்டை சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்,
    • அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை அடுத்த ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஈசாக் (வயது 43) கூலி தொழிலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈசாக் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈசாக் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன் சாவு.
    • மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவரது மகன் சரவணன் (வயது 25).  டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படித்துள் ளார். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு துபாயில் உள்ள அஜ்மன் பகுதியில் உள்ள நிறுவனத்திற்க்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றார்  இவர் அவ்வப்போது பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

      இந்நி லையில் நேற்று இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்ட நபர் சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் செய்வது அறியாமல் கதறி அழுதனர். இதுகுறித்து சரவணனின் பெற்றோர் கூறுகையில், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக நிறுவத்தினர் கூறுகின்றனர். எனது மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்  வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் .
    • போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்..

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (32) என்பவர் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். 

    • தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பணி செய்பவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.  இதில் மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, மாவட்ட அமைப்பாளர் தணிகைவேல், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

    ×