என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரியம்மை உடனுறை மேலகங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    இதனைதொடர்ந்து கோமாதாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்து, காலில் சலங்கை கட்டியும், பசு மாட்டிற்கு வளையல்களை அணிவித்தும் வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோமாதாவிற்கு அன்னம் ஊட்டியும் மஞ்சள் பூசியும் வழிபாடு செய்தனர்.

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மேல்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார். மீண்டும் அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர்.


    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொழுவந்தாங்கலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம்போல் சென்றனர் .அப்போது பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனே தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கோவில் கட்டினால் இட நெருக்கடி ஏற்படும். மேலும் கோவிலில் விழா நடக்கும் சமயத்தில் எங்களின் கல்வி பாதிக்கப்படும்.

    எனவே பள்ளி வளாகத்தில் கோவில் கட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அங்குள்ள கடுவனூர்-அத்தியூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த வட பொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமை யிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே அலியாபாத், காட்டு எடையார் பாளையம் மற்றும் காட்டுசெல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர். இது குறித்து ஜி.அரியூர் மின்வாரிய இளமின்பொறியாளர் கிருபாகரன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,   உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது,
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    • 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது. இந்த மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின் மாற்றியை கீழே தள்ளியதில் அதிலிருந்த சுமார் 200 லிட்டர் ஆயில் கீழே கொட்டி வீணாகியது. தொடர்ந்து மின் மாற்றியை கழற்றி அதனுள் இருந்த சுமார் 625 கிலோ தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தியாகதுருகம் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகை யில், மர்ம நபர்கள் மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை திருடி சென்ற தால் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள மின் மாற்றிகளுக்கு விவசாயமின் இணைப்பை பிரித்து வழங்க நடவடிக்கை என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அனுமந்தல் கிராமம் ராமன் மகன் பிச்சப்பிள்ளை (வயது 44) இவர் நைனார்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்கு, கடை வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிலள இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் தோட்டப்பாடி கிராமம் சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் சோதனை மேற்கொண்ட போது குழந்தைசாமி என்பவருடைய மகன் விஜயன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சின்னசேலம் குமரன் நகர் பிச்சப்பிள்ளை என்பவருடைய மகன் பெரியசாமி (வயது 50) என்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த 10 லிட்டர் தென்னை மரத்துக் கள்ளினைபறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிய உணவு இடை வேளையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. துணை தலைவர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசால் அறிவிக்க ப்பட்ட அரசாணை எண் 207-ன் படி இளநிலை வருவாய் ஆய்வா ளராக பணிபுரிந்து வரும் சரவணனு க்கு பதவி உயர்வு வழங்க க்கோரி போராட்டம் நடை பெ ற்றது. இதில் கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    • சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது.
    • கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது. எனவே இந்த இறங்கு தளம் மூலம் சரக்கு ெரயிலில் இருந்து வரும் உரங்கள், யூரியா, அரிசி மூட்டை ஆகியவற்றை இறக்கி சேமிப்பு கிடங்களில் வைப்பது வழக்கம். அதேபோல் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது. டெல்டா மாவட்டங்களான நாகை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடை முன் கூட்டியே நடைபெற்று வருகிறது.

    இதனால் அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ரேசன் கடைகளுக்கு அரிசி வழங்குவதற்காக 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வாங்கி அதை சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றி வந்து லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதன் மூலம் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளனர்.

    • இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்
    • சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோட்டை அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (29). இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இரவு பகண்டை சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×