என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புத்தந்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 26) இவர் சம்பவத்தன்று புத்தந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24), என்பவர் நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின் முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஏழுமலை. இவர் கடந்த 8 -ந்தேதி நல்லாத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (வயது 24), விஜயபாரதி வயது (24) ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை இருவரையும் விசாரித்தார். அப்போது உதயகுமார், விஜயபாரதி ஆகியோர் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கச்சிராய பாளையம் போலீஸ் நிலை யத்தில் ஏழுமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த 2பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன் மகன் ராஜ்முகமது (வயது 35) இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்நிலையில் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கின் உட்புறத்தில் கருப்பு ஆயில் அடிக்க வேண்டுமென தொழிலாளிகளிடம் கூறினார்.அதன்படி கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45) என்பவர் செப்டிக் டேங்கில் இறங்கி கருப்பு ஆயில் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரவி எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தார்இதனை அறிந்த தொழிலாளிகளான சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்( 37), பிரகாஷ் (29) ஆகியோர் செப்டிக் டேங்கில் இறங்கினர். இவர்களும் மயக்கம் அடைந்தனர்.
அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரவி, தர்மலிங்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர். இந்த சம்பவம் சூளாங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோடு அடுத்த பெரிய க்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 33). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 11ம் தேதி உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பகண்டை கூட்டுரோடு போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எகால் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்த மாரிமுத்து மகன் குமார் அலறியடித்து க்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூரை வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும், கூரை வேயப்பட்ட சோகயை பிடுங்கி எரிந்தும் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த நெல் மூட்டைகள், துணி, மின்சாதன பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 47) இவர் கள்ளக் குறிச்சி சுந்தர வினாயகர் கோவில் தெரு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து
இந்த பழைய இரும்பு கடையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவல் அறிந்த கள்ளக் குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் மற்றும் தியாக துருகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பழைய இரும்பு கடையில் இருந்த பழைய இன்ஜின், ஆயில், டயர் உள்ளிட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.
ரூ. 5 லட்சம் சேதம்
இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கள்ளக்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 22) என்பதும், மேலும் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதே போல் கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் பகுதியில் மேலும் 2 வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கோகுலை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர், பிப்.9-ககள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா நன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). விவசாயி. இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காணமல் போன 9-ம் வகுப்பு மாணவியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதில் அதே ஊரில் செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றிய நடையன் (21) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் நடையனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் செங்கல்பட்டு பகுதியில் பணி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவருடன் அந்த மாணவியை தங்க வைத்திருப்பதும் தெரியவந்தது.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் செங்கல்பட்டு அருகேயிருந்த செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த டிரைவர் நடையனை போக்சோ சட்டடத்தின் கீழ்கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 9-ம் வகுப்பு மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
- 2 ,பேரும் நண்பர்கள். இதில் ஸ்டாலினுக்கு அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது
- இருந்த போதும் 3 லட்ச ரூபாய் பணம் திருப்பி வழங்கப்படவில்லை
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 40), ஸ்டாலின் (42). 2 பேரும் நண்பர்கள். இதில் ஸ்டாலினுக்கு அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது. தனது நண்பரான ஏழுமலையிடம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே யாரிடமாவது வாங்கி கொடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதே பகுதியில் வசிக்கும் மதினா (30) என்பவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி ஸ்டாலினிடம் ஏழுமலை கொடுத்தார். இதையடுத்து ஸ்டாலின் மாதா மாதம் வட்டி கட்டவில்லை எனத் தெரிகிறது. எனவே, கடன் தொகையை திருப்பித் தருமாறு ஸ்டாலினிடம் மதினா கேட்டுள்ளார். இதற்கு ஸ்டாலின் சரியாக பதில் தராமல் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மதினா இது தொடர்பாக ஏழுமலையிடம் கூறினார். ஸ்டாலினிடம் பேசி பணத்தை திருப்பி வாங்கித் தருவதாக கூறுகிறார். இருந்த போதும் 3 லட்ச ரூபாய் பணம் திருப்பி வழங்கப்படவில்லைஇ.ந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ஜெகனிடம் நடந்த சம்பவங்களை மதினா கூறியுள்ளார். இது குறித்து பேச வேண்டும் எனது கடைக்கு வா என்று ஏழுமலையை, ஜெகன் அழைத்துள்ளார். இதையேற்று ஏழுமலை அங்கு சென்றார். அப்போது ஏழுமலைக்கும் மதினாவின் உறவினராக ஜாகீர் உசேன் (49) என்பவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஏழுமலையின் தலையில் ஜாகீர் உசேன் ஓங்கி அடித்தார்.தலையில் பலத்த காயமடைந்த ஏழுமலை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் ஜாகீர் உசேன், ஜெகன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜாகீர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட கெடிலம் ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் அசோக், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் உடையானந்தல் வந்தனர்.
அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப் பிடித்தனர். மாட்டு வண்டியின் உரிமையாளரான மணிகண்டன், பெருமாள் வெங்கடேசன், வீரமணி, ஆகிய 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். உடனே 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசாருக்கு பைத்தந்துரை ஏரிக்கரையில் சாராயம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- பைத்தந்துறை ஏரிகரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு பைத்தந்துரை ஏரிக்கரையில் சாராயம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பைத்தந்துறை ஏரிகரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களில் 3 பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(வயது 33), வெற்றி(27), மற்றும் வாணியந்தல் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(42), என்பதும் தப்பி ஓடியவர்கள் விஜயராஜ், ராஜிவ்காந்தி என்பதும் தெரிய வந்தது மேலும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் 5 கேன்களில் எரிசாராயம் மற்றும் 200 கிராம் கஞ்சாவும் விற்பனைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் சின்னதுரை, வெற்றி, பழனியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 105 லிட்டர் எரிசாராயம் 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.






