என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
    • விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தா சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார். கீழ்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் பெத்தாசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தாசமுத்திரம் பெரு மாள் கோவில் அருகே பனை மரத்தில் பானை கட்டி இருந்ததை பார்த்த னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பானையின் உள் பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்டு பதநீர் என்ற பெயரில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    பனை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை போலீசார் உடைத்தனர். இதையடுத்து பதநீர் என்ற பெயரில் கள் இறக்கி விற்பனை செய்த பெத்தா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
    • பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராய பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடுத்த வாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவருக்கு பொன்மொழி என்ற மனைவியும் பாரதி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பாரதியை தேடினர். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் பாரதியின் தாயார் பொன்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பாரதியை தேடி வருகின்றனர்.

    • அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.
    • நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால் அரியலூர், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனூர், பெரிய கொள்ளியூர், சின்ன கொள்ளியூர், வடமாமந்தூர், ஈருடையாம்பட்டு, சுத்தமலை, அத்தியந்தல், வடபொன்பரப்பி, சவுரியார்பாளையம், அரும்பராம் பட்டு, இளையனார்குப்பம், ஓடியந்தல், வானாபுரம், சீர்பனந்தல், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டை கூட்டு ரோடு, மரூர், கடம்பூர், மையனூர், ஏந்தல், பெரிய பகண்டை, எகால் ஆகிய கிராமங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கி யுள்ளது. அதன்படி சின்ன சேலம் அருகே உள்ள வி. அலம்பலம், பாக்கம்பாடி, தோட்டப்பாடி, கள்ளா நத்தம், தகரை, நாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கப்படுறது.தமிழக அரசு பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறகக தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் பதநீர் இறக்க தடையில்லை. அனுமதி ஏதும் பெறத் தேவையில்லை. ஏனெனில் பதநீர் என்பது போதையற்ற ஆரோக்கிய பானமாகும்.இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் பனை மரத்தில் இருந்து பதநீரை இறக்கி, போதை தரும் பவுடர்களை கலந்து விற்பனை செய்கின்றனர். மேலும், தென்னை மரங்களில் பல்லாக்களை கட்டி நேரடியாகவே கள் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

    இதனை அருந்தும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒருசில மாணவர்கள் போதையிலேயே இருந்து வருகிறைனர் ஏற்கனலே, சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும் சின்னசேலம் பகுதியில் படு ஜோராக நடக்கிறது.போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், இது குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தமிழக போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் நடக்கிறது.மேலும். ஒரு சில வாரங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளன. வீட்டில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலையிலேயே பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் கள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க போலீஸ் துறை தனிப்படை அமைத்து சின்னசேலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    • அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்
    • போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தஅரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது, லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), தவமணி (19), அஜித் (20) என்பதும், தப்பி ஓடியவர் மல்லாபுரம் முத்துராமன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துராமனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • பெரியசாமி (வயது 35). இவர் கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • இவர் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் பெரியசாமி (வயது 35). இவர் நேற்று மாலை வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். காட்டுமைலூர் சிவன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.
    • இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள தேவி நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.

    இதன் மூலமாக அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்படும் அவலம் உள்ளது. மேலும் இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், அக் கழிவு நீர் தொட்டியை கான்கிரீட் பலகையால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக மூங்கில்துறைப்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி செயலாளர் சிராஜ்தீன் கோரிக்கை வைத்துள்ளார்.

    சென்னையில் இருந்து ஏற்காட்டுக்குச் சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் வெங்கடேசன் பலத்த காய மடைந்தார்

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஆர்.ஆர். குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்க டேசன், அவருடைய நண்பர் உத்திராணம். இருவரும் உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அப்போது சென்னையில் இருந்து ஏற்காட்டுக்குச் சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் வெங்கடேசன் பலத்த காய மடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த உத்தி ரானம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாய மடைந்த வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கைப்பற்றி, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார்
    • திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கிருபாஷினி என்கிற 4 வயது பெண் குழந்தையும் புவஸ்ரீ என்ற 5 மாத கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சின்ன சேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார். திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • தனியார் தங்கும் விடுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • ஒட்டல் தொழிலாளி சசிகுமார் (வயது 49) மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறச்சி:

    சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாசாமி தலைமையிலான போலீசார் தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது சின்ன சேலம் மேற்கு தெருவை சேர்ந்த ஒட்டல் தொழிலாளி சசிகுமார் (வயது 49) மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டல்களை சின்ன சேலம்

    நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 60). இவர்களது மகள், மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்

    இந்நிலையில் வழக்கம்போல் சின்ன சாமி, செல்லமாள் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து சின்னசாமி மற்றும் செல்லமாளை தாக்கி அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்றும் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார்,

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 27). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கீழ்பாடி அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கத்தில் சத்தியராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×