என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன்சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பகண்டை கூட்ரோட்டிற்கு சென்றார். அப்போது திருக்கோவிலூர்- சங்கராபுரம் நெடுஞ்சாலையை வனபுற்று மாரியம்மன் கோவில் அருகே கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • உடனடியாக தார் சாலை அமைத்து தரவும், சாலையோர பணிகள் நடைபெறும் போது வனத்துறையினர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே கருவேலம்பாடி கிராமம் உள்ளது. இங்கு குண்டியாநத்தம் ஊராட்சியில் இருந்து கருவேலம்பாடி கிராமம் வரை 2.5 கிலோ மீட்டர் சாலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சாலையில் கர்ப்பிணி பெண்கள், ஊனமுற்றோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இயலாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் ஜல்லி மண் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மண் சாலை அமைத்தால் மழைக்காலங்களில் மீண்டும் பொதுமக்கள அவதியுறும் நிலை ஏற்படும். எனவே இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும். கொடுந்துறையில் இருந்து கருவேலம்பாடி வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்தப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்றாலோ அல்லது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றாலோ வனத்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர்  எனவே மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தரவும், அந்தப் பகுதியில் சாலையோர பணிகள் நடைபெறும் போது வனத்துறையினர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார்,இவர் வீட்டுக்கு திரும்பும்போது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்..
    • 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்..

    கள்ளக்குறிச்சி:

    நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் தோட்டபாடி வனகாப்பு சாலையில் செல்லும் பொழுது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் 4 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்

    . அப்பொது நயினார்பாளையம் செல்லும் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் ,பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம், அடரி, வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார் (வயது 21), சின்னசேலம், சிவன் கோயில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் சூர்யா (வயது 20), சூளாங்குறிச்சி காந்திநகர் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்பெல்லா (வயது 19) என்பதும் தெரியவந்தது. பின்னர் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற மற்றொரு இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது போன்ற வழிப்பறியில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

    • போலீசார் பணியில் ஈடுபட்டபோது, சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பாலு(வயது21), சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்
    • அவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே குளத்தூர் பகுதியில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கிராம சேவை மைய கட்டிடம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலு(வயது21), குலத்தார் கிராமத்தை சேர்ந்த சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
    • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு, ஊராங்காணி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசம் பட்டுகுளம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஊராங்காணி கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    • போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதிகளில் தீவிர ரோந்துபணியில் இருந்தனர். அப்போது வெவ்வேறு இடத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக உள்ள சோலையம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.பட்டியலின மக்கள் சோலையம்மன் கோவிலில் வழிபாடு செய்ய கூடாது என பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறினர். இதைய டுத்து நாங்களும் சாமி கும்பிடு வோம் என பட்டியல் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். இதனால் பாண்டியன்குப்பம் கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.ஜாதி கலவரம் ஏற்படா மல் இருப்பதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும், வருவாய்த் துறையும் பிரச்சனைக்குரிய பாண்டியன்குப்பம் கிரா மத்தில் 144 தடை உத்தரவை பிரப்பித்தனர். கடந்த 2012- ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.

    இந்த நிலையில், பாண்டி யன்குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூட தடையும், கிராம சபை கூட்டம் நடத்த தடை, அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை பாண்டியன் குப்பம் கிராம மக்கள் சந்தித்து வருகிறார்கள். தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு மன வேதனையில் உள்ளனர். இதனை யொட்டி தற்போது பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகத்தினர் தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க முடி வெடுத்தனர்பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த இரு வேறு சமூகத்தி னரும் தங்களுக்குள் சமாதானம் அடைந்து கடந்த 2 தினங்க ளுக்கு முன்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா, சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா, மற்றும் வருவாய்த்துறை யினருடன் பேசி பாண்டி யன்குப்பம் கிராமத்தில் இருதரப்பு சமூக மக்களும் இனி பிரச்சினைகள் இன்றி சமத்துவமாக, சகோதரத்துவமாக தங்கள் கிராமத்தில் உள்ள சோலை யம்மன் கோவிலில் தேர் திருவிழாவை நடத்திக் கொள்கி றோம் என ஒப்புதல் அளித்து, பாண்டியன் குப்பம் கிராமத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.பாண்டியன்குப்பம் கிரா மத்தில் கடந்த 12 ஆண்டு களாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக மக்கள் சோலையம்மன் கோவில் பிரச்சினை காரணமாக வேறு பட்டு கிடந்த நிலையில் தற்போது ஊர் நலனுக்காக தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு 144 தடை உத்தரவை நீக்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

    • தியாகதுருகம் பகுதியில் பனை மர கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது..
    • போதை அதிகமாக இருப்பதற்க்காக போதை பவுடர் கலக்கின்றனர். இதனால் கள் குடிப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை போலீஸ் துறையினர் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து சாராய ஊரல்களை அழித்து வருகின்றனர். சாராயம் காய்ச்சும் மற்றும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் பகுதியில் பனை மர கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.அதன்படி தியாகதுருகம் பகுதியில் கொங்கராயபாளையம், சித்தலூர், கண்டாச்சி மங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பனை மரங்களில் பதநீர் இறக்குவதாக கூறிவிட்டு கள் இறக்கப்படுகிறது. இவ்வாறு இறக்கப்படும் கள் ஜக்கு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்குள் கள் விற்பனை முடிந்து விடுகிறது. சாராயம் மற்றும் மதுபாட்டில்களை விட விலை குறைவாக உள்ளதாலும், கிராமங்களில் எளிதில் கிடைப்பதாலும் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கள் குடிக்க சென்றுள்ளனர்.இவ்வாறு பனை மரங்களில் கள் இறக்கி விற்பவர்கள், குடிப்பவர்களுக்கு போதை அதிகமாக இருப்பதற்க்காக போதை பவுடர் கலக்கின்றனர். இதனால் கள் குடிப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது. இதனால் கள் குடிப்பவர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் அவதியடைகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், இது குறித்து ஆய்வு செய்து கள் இறக்குபவர்கள், அதை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • விவசாயிகொளஞ்சியின் மனைவி பொரப்பா. இவரது மாடு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறப்படுகறிது..
    • செந்திலும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன் (28) ஆகியோர் சேர்ந்து கொளஞ்சி யை திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியத்தை அடுத்த வேடநத்தம் பகுதியில் வசித்து வருபவர் கொளஞ்சி. விவசாயி. அவரது மனைவி பொரப்பா. இவரது மாடு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறப்படுகறிது. இதனால் செந்திலும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன் (28) ஆகியோர் சேர்ந்து கொளஞ்சி யை திட்டி தாக்கினர்

    . இது குறித்து கொளஞ்சி யின் மனைவி பொரப்பா கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் மற்றும் குமரேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
    • இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது குடும்பத்திற்கும் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மனைவி வசந்தா, மூர்த்தி, மணி இவரது மனைவி சுகன்யா ஆகியோர் மீதும், அண்ணாமலை மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி லதா, மகன்கள் அருண், சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×