search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய சங்கத்தினர் நடைபயணம்
    X

    விவசாய சங்கத்தினர் நடைபயணம்

    • இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது.
    • நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துத வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    Next Story
    ×