என் மலர்
கள்ளக்குறிச்சி
- அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது.
- அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும், இந்த நிலையில் குடிநீர் வழங்காத அருகில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கச்சி ராயபாளையம் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார் பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ). குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவீட்டிற்கு திரும்பிய போதுடிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
- இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி கூட்ரோடு விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ).இவர்களின் உறவினர்கள் வினோதினி (34), நாராயணன் (52) காரை ஓட்டிய விக்னேஷ் (30) ஆகியோர் காரில் கடலூர் மாவட்டம் நந்தி மங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது விருத்தாசலம் வி. கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னாள் சென்ற கரும்பு டிராக்டரை கார் முந்தி சென்றுள்ளது. அப்பொழுது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 4 பேர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இறந்த கோமதியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 4 பேரும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
- 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (வயது 60) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
- அம்மு என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (33) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
- கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூரை சேர்ந்தவர் ஜெகன் மனைவி தனலட்சுமி (வயது 48). இவரது மகள் அம்மு என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (33) என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னதம்பி சம்பவத்தன்று தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த டி.வி., பீரோ, அடுப்பு உள்ளிட்ட பொருட்களை உடைத்துள்ளார், மேலும், தனலட்சுமியை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது36) என்பவர் எஸ்.வி.பாளையம் சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- இதேபோல் சாராயம் விற்பனை செய்த செல்வம்(42), பூபதி (52) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல்செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராயப்பன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது36) என்பவர் எஸ்.வி.பாளையம் சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்பனை செய்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(42), புதுப்பா லப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி (52) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- பிச்சன்(53) விவசாயி. இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்று,மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்றார், அப்போது அதில் ஒரு மாடு திடீரென பிச்சனை முட்டி தள்ளியது.
- இதில்,பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் பிச்சன்(53) விவசாயி. இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்றார். பின்னர் மீண்டும் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்,
அப்போது அதில் ஒரு மாடு திடீரென பிச்சனை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
- பால கிருஷ்ணன் (வயது 63). அமா வாசை (45). இவர் பால கிருஷ்ணனிடம் கடனாக ரூ.1½ லட்சம் வாங்கி இருந்தார். கடனை அவர் திருப்பிக் கொடுக்க வில்லை.
- இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப்பட்டை அடுத்த மங்களம் கிரா மத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 63). அதே பகுதி சேர்ந்தவர் ராமன் மனைவி அமா வாசை (45). இவர் பால கிருஷ்ணனிடம் கடனாக ரூ.1½ லட்சம் வாங்கி இருந்தார். பின்னர் அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்க வில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் பால கிருஷ்ணன் தரப்பிற்கும், அமாவாசை தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால கிருஷ்ணனும், மற்றும் பாலகிருஷ்ணன் மகன் மகேந்திரனும் (26) சேர்ந்து அமாவாசையை திட்டி தாக்கினர்.
மேலும் அவரது தலையை பிடித்து சுவற்றில் அடித்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அமாவாசை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன், மகேந்திரன் ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமாவாசை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரி ழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி மகேந்தி ரனை போலீசார் கைது செய்தனர். மேலும் பால கிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.
- சங்கராபுரத்தை அடுத்த பாவளம் கிராமத்தை சேர்ந்த வர் சரத்குமார் (வயது 22). இவர் 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்றார்
- பதுங்கி இருந்த சரத்குமாரை போலீசார் மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரத்தை அடுத்த பாவளம் கிராமத்தை சேர்ந்த வர் சரத்குமார் (வயது 22). இவர் 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்றார். இது குறித்து சிறுமியின் தந்தை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சரத்குமாரை போலீசார் மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
- கணபதி (வயது 45) இவர் தனது சொந்த வேலை காரணமாக செல்லும்போது, நாராயணன் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டதால் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணபதி இறந்து போனார்
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது 45) . இவர் தனது சொந்த வேலை காரணமாக கச்சிராயபாளையம் சென்று மீண்டும் தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல தொட்டியம் சுண்ணாம்பு ஓடை அருகே செல்லும் பொழுது கணபதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் நாராயணன் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டதால் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கணபதிக்கு பலத்த அடிபட்டு மூக்கு மற்றும் காதில் ரத்தம் வந்துள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் கணபதியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணபதி இறந்து போனார். இது குறித்து கணபதியின் மகன் ஸ்ரீராம் (23) கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.
- மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு மனைவி பவுன் (வயது 50) கூலி தொழிலாளி, இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 27- ந் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 2- ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் பவுனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கழிவறை செல்வதற்காக எழுந்து சென்றவர் மயக்கம் வருவதாக கூறி மீண்டும் வந்து படுக்கையில் படுத்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவரது உறவினர்கள் பவுன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது உடற்கூறு ஆய்வு முடிவு தெரிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறி உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை ஏற்று உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து செல்வராசு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது.
- நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துத வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார், நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
- தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வரஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார் உள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 4 கடைகளில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.
அதன்படி கடைகாரர்களிடமிருந்து ரூ.800 வசூல் செய்ய ப்பட்டது. தொடர்ந்து கிராமப் பகுதிகளில் எளிதில் கிடைக்கும் வாழை இலைகளை டீக்கடை மற்றும் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும், மளிகை கடைக்கு வரும் பொதுமக்களிடம் மஞ்சப்பை எடுத்துவர சொல்ல வேண்டும் எனவும் கடை உரிமையாள ர்களிடம் அறிவுறுத்தினார் மேலும் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இவ்வாறு கடைகளை ஆய்வு செய்து அதிரடியாக அபராதம் விதித்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.






