என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் கிரயம்"

    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளை (52) என்பவருக்கு சொந்தமான 1.68 சென்ட் நிலத்தை 54 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்தார்.
    • பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாபிள்ளை (வயது 41). பழனியாபிள்ளை ,வாசுதேவன் பிள்ளைக்கு சொந்தமான வீட்டின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாபிள்ளை (வயது 41). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளை (52) என்பவருக்கு சொந்தமான 1.68 சென்ட் நிலத்தை 54 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்தார். இதற்காக பழனியாபிள்ளை தன்னுடைய வீட்டையும், பூர்வீக நிலத்தையும் விற்று தவணை முறையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பணத்தை வாசுதேவன் பிள்ளையிடம் கொடுத்துள்ளார்  நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி கடந்த 2 வருடமாக வாசுதேவன் பிள்ளை காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியா பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று காலை பெத்தானூரில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளைக்கு சொந்தமான வீட்டின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவலின் பெயரில் சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து பழனியா பிள்ளை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×