சின்னசேலம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி

ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ). குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவீட்டிற்கு திரும்பிய போதுடிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சின்னசேலம் அருகே  பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி கூட்ரோடு விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ).இவர்களின் உறவினர்கள் வினோதினி (34), நாராயணன் (52) காரை ஓட்டிய விக்னேஷ் (30) ஆகியோர் காரில் கடலூர் மாவட்டம் நந்தி மங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது விருத்தாசலம் வி. கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னாள் சென்ற கரும்பு டிராக்டரை கார் முந்தி சென்றுள்ளது. அப்பொழுது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 4 பேர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இறந்த கோமதியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 4 பேரும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com